SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எடப்பாடி மீதான ஊழல் வழக்கில் கூடுதல் ஆதாரங்களை தருவோம் : ஆர்.எஸ்.பாரதி பேட்டி

2018-10-13@ 00:30:48

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான ஊழல் வழக்கில் கூடுதல் ஆதாரங்களை தருவோம் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறினார்.திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று மாலை அண்ணா அறிவாலயத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது துறையில் செய்த ஊழல்களை திமுக தலைவர் ஸ்டாலின் பட்டியலிட்டு கூறினார். இது தவறு என்றால் என் மீது வழக்கு போடுங்கள் என்றும் கூறினார். ஆனால், எடப்பாடி இதற்கு எந்த பதிலும் கூறாமல் மவுனம் காத்தார். இதனால் நாங்கள் கடந்த ஜூன் மாதம் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் தந்தோம்.ஒட்டன்சத்திரம், செங்கோட்டை, மதுரை, வண்டலூர் போன்ற நெடுஞ்சாலைக்களுக்கான டெண்டரை தனது சம்பந்தி, மாமனாருக்கு முறைகேடாக விட்டார். இதன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கைகள் எடுக்காததால் நாங்கள் கடந்த 28.8.2018 அன்று வழக்கு தொடர்ந்தோம். உரிய ஆதாரங்களையும் தாக்கல் செய்தோம்.

ஒரு கிலோ மீட்டர் சாலை போட 2 கோடியே 20 லட்சம் செலவு செய்யலாம் என்பதை மாற்றி, இந்த சாலைகளுக்காக ஆயிரத்து 515 கோடியாக மதிப்பீட்டை உயர்த்தி சம்பந்தி நிறுவனத்துக்கு டெண்டர் தந்தார். இதில் மொத்தம் 4 ஆயிரத்து 500 கோடி ஊழல் நடந்துள்ளது. இந்த புகாரில் எந்த முகாந்திரமும் இல்லையென்று பாலியல் புகாருக்கு உள்ளான ஐஜி முருகன் அறிக்கை தந்தார். உறவினருக்கு தரக்கூடாது என்ற உலக நியதியையும் பின்பற்றவில்லை. அரசு தந்த அறிக்கை பித்தலாட்டம் என்று கூறி சிபிஐக்கு வழக்கை மாற்றி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை, கவர்னர், ஆட்சி எதுவுமே சரியில்லாத நிலையில் தமிழக மக்களை காப்பது நீதிமன்றம்தான். நீதிபதியின் தீர்ப்பை ஏற்று எடப்பாடி உடனே முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் இனியாவது லஞ்ச ஒழிப்புத்துறை முறையாக செயல்பட வேண்டும். நாங்கள் ஏற்கனவே பன்னீர்செல்வம், வேலுமணி, தங்கமணி மீது புகார் தந்துள்ளேம். இனியும் தருவோம், எனவே லஞ்ச ஒழிப்புத்துறை ஒழுங்காக நடக்க வேண்டும். 1350 ரூபாய்க்கு வாங்க வேண்டிய எல்.இ.டி பல்பு 6500லிருந்து 9500 வரைக்கும் வாங்கப்பட்டுள்ளது. இதற்கு சான்றிதழ் தருவதற்காகவே ஒருவருக்கு பதவி நீடிப்பும் தந்துள்ளனர். எனவே எடப்பாடி பதவியில் நீடிப்பதில் எந்த நியாயமும் இல்லை. 3மாதத்திற்குள் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது. அதுவரை பொறுத்து இருப்போம். ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, விருதுநகர் சாலைகளை பராமரிக்கவே ₹2500 கோடி ஒதுக்கி உறவினர்களுக்கு தந்துள்ளனர். இதையெல்லாம் நாங்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளோம். மேலும் நீதிமன்றங்கள் கேட்டால் கூடுதல் ஆதாரங்களையும் தருவோம். அழைத்தால் விசாரணைக்கும் ஒத்துழைப்போம்.இவ்வாறு கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்