SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழக கவர்னர் பதவி விலகுவதுதான் அழகு - கமல் பேட்டி

2018-10-13@ 00:29:45

சென்னை: தமிழக கவர்னர் விவகாரத்தில் தவறு இருக்கும்பட்சத்தில், அவர் பதவி விலக வேண்டியதுதான் அழகு என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், சென்னையில் இருந்து நேற்று காலை 10 மணிக்கு விமானம் மூலம் சேலம் புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:தமிழகத்தில் மழையை காரணம் காட்டி திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளி வைத்தது அரசின் நாடகம். ஒரு சிறிய மழைக்காக தேர்தலையே தள்ளி போட வேண்டுமா? இப்போது மழையே இல்லையே.

தமிழகத்தில் கோயில் சிலைகள் கடத்தும் விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் சிலைகள் நம்நாட்டின் சொத்து. அதை, அனைவரும் பாதுகாக்க முன்வர வேண்டும். ஏற்கனவே சிலை கடத்தலை தடுக்க மக்கள் நீதி மய்யம் உதவ முன்வந்தபோது, ‘எங்களுக்கு அந்தளவு திறமை இல்லை’ என்று கூறி தட்டிக்கழித்து விட்டனர்.மத்திய அமைச்சர் நிதின்கட்கரி, கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, ‘நாங்கள் ஆட்சிக்கு வரமாட்டோம் என்ற தைரியத்தில்தான் மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்தோம். இப்போது நாங்கள் திகைத்து கொண்டிருக்கிறோம்’ என்று கூறியது, அரசியல்வாதிகளில் சிலர் உண்மை பேசுபவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்று உறுதிபடுத்துகிறது.கவிஞர் வைரமுத்து விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்தான், அதற்கு தகுந்த கருத்தை கூற வேண்டும். 3வது நபர், வேறு நபர் கருத்து சொல்ல முடியாது.
தமிழக கவர்னர் விவகாரத்தில் தவறு இருக்கும்பட்சத்தில், அவர் பதவி விலக வேண்டியதுதான் அழகு. தைரியமான ஒரு அரசியல்வாதி, தன்மீது குற்றச்சாட்டு வந்தால், அது தவறு என்று நிரூபிக்கும் வரையிலாவது பதவியில் இருந்து விலகி இருக்க வேண்டும். அதுதான் அழகு. கவர்னர், மிகவும் ஜாக்கிரதையாகவும், கவனத்துடனும், மரியாதையாகவும் பேச வேண்டும். பேசியதை மாற்றி, மாற்றி பேசக்கூடாது. அது அவரது பதவிக்கு அழகல்ல. அதிமுக உறுப்பினர்கள் எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்கும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளது வெறும் பேச்சுக்கு மட்டும்தான்.இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-12-2018

    16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lisbon_tramp11

    லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்