முதலமைச்சர் பழனிசாமி உடனே பதவி விலக மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்
2018-10-12@ 17:52:16

சென்னை: சி.பி.ஐ. விசாரணைக்கு உள்ளாகியிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனே பதவி விலக வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இல்லையெனில் அவரை ஆளுநர் அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் பழனிச்சாமி நெடுஞ்சாலைத்துறையின், ஒப்பந்த பணிகளை தனது உறவினர்களுக்கு வழங்கியதாக ஆர்.எஸ்.பாரதி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்திருந்தார். 4,800 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்த பணிகளில் ஊழல் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.
லஞ்ச ஒழிப்புத் துறை என்பது முதல்வருக்கு கீழே செயல்படக்கூடிய ஒரு அமைப்பு. அதனால் இதில் பெரிய அளவில் எந்த விசாரணையும் செய்யப்படாமல், வழக்கில் முன்னேற்றம் ஏற்படாமல் இருந்தது. இதனால் சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும் என்று திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கில் தற்போது புதிய திருப்பமாக எடப்பாடி பழனிச்சாமி மீதான வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சி.பி.ஐ. விசாரணைக்கு உள்ளாகியிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனே பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
சி.பி.ஐ. விசாரணைக்கு உள்ளாகியிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனே பதவி விலக வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இல்லையெனில் அவரை ஆளுநர் அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்திய முதல்வர்களிலேயே தம் சம்பந்திக்கு ஒப்பந்தங்கைள கொடுத்தது எடப்பாடி மட்டும் தான் என்று குற்றம் சாட்டிய ஸ்டாலின், தன் சம்பந்தி டெண்டரை எடுக்கக்கூடாதா என்று என்று வாதிட்டவர் எடப்பாடி பழனிசாமி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
பாமக நிறுவனர் ராதமாஸ்
லஞ்ச ஒழிப்புத்துறையில் நீதிமன்றத்திற்கு நம்பிக்கையில்லாததால் வழக்கை சிபிஐ-க்கு மாற்றியது உயர்நீதிமன்றம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் 2011 -ல் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆனது முதல் ஊழல் செய்து வருகிறார் எடப்பாடி என்று கூறிய அவர், ஆளுநர்களின் உதவியால் தப்பிய எடப்பாடி பழனிசாமி தற்போது சிபிஐ-யிடம் சிக்கியுள்ளார் என்றும் நெடுஞ்சாலைத்துறை ஊழல்களுக்கு பொறுப்பேற்று எடப்பாடி ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்
சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதால் ஜனநாயக மரபை மதித்து முதல்வர் தாமே முன்வந்து பதவி விலக வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்
சிபிஐ விசாரணைக்கு உள்ளாகியிருக்கும் முதலமைச்சர், பதவியில் நீடிக்க தார்மீக உரிமையில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமாகா தலைவர் வாசன்
முதல்வர் மீதான சிபிஐ வழக்கு ஆளும் ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இழுக்கு என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.பாரதி
முதல்வர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். ஒட்டன்சத்திரம் - தாராபுரம் - அவிநாசி 4 வழிச்சாலைப்பணிக்கு ரூ.1515 கோடிக்கு டெண்டர் விட்டு ஊழல் நடந்துள்ளது என்று கூறிய பாரதி, அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, துணை முதல்வர் ஓ.பி.எஸ். மீதும் ஊழல் புகார் தெரிவித்தார். இதனிடையே வண்டலூர்-வாலாஜா 6 வழிச்சாலை ஒப்பந்தத்தில் முறைகேடு; உண்மையான மதிப்பீட்டை மறைத்து, முதல்வர் எடப்பாடி சாலைப்பணிக்கான மதிப்பீட்டை உயர்த்தியுள்ளார் என்றும் பாரதி குற்றம் சாட்டினார்.
Tags:
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிபிஐ விசாரணை மு.க.ஸ்டாலின் நெடுஞ்சாலைத்துறைஇ ஒப்பந்தம் சென்னை உயர்நீதிமன்றம்மேலும் செய்திகள்
கோட், சூட் அணிந்தவர்களுக்கே தள்ளுபடி: ஏழை விவசாய கடன்களை கண்டுகொள்ளாதவர் மோடி....திருப்பதியில் ராகுல் குற்றச்சாட்டு
21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை அதிமுக அரசு நடத்துமா என சந்தேகம்: கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு
வருமான வரித்துறை ரெய்டால் ஆட்டம் காணும் அமைச்சர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
சொல்லிட்டாங்க...
புல்வாமா தாக்குதலின்போது என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? மோடிக்கு காங்கிரஸ் கேள்வி
பாஜ.வுக்கு எதிராக வியூகம்... டெல்லியில் 27ம் தேதி எதிர்க்கட்சிகள் கூட்டம்
23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!
சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை
திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா
சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்