SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உயர்மட்டத்தில் இருப்பவர்களை காப்பாற்றவே நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்காமல் இழுத்தடிப்பதாக சந்தேகம்

2018-10-12@ 17:09:26

மதுரை: உயர்மட்டத்தில் இருப்பவர்களை காப்பாற்றுவதற்காகவே பேராசிரியர் நிர்மலா தேவி உள்ளிட்ட 3 பேருக்கும் ஜாமீன் வழங்காமல் இழுத்தடிப்பதாக மதுரை காமராஜர் பல்கலை கழக பேராசிரியர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். மதுரையில் பேசிய காமராஜர் பல்கலை கழக பாதுகாப்பு கூட்டமைப்பினர் பேராசிரியர் நிர்மலா தேவி, உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் 9 முறை தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறினர்.

நிர்மலா தேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தார் என்றால் அவர் யாருக்காக இதனை செய்தார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதே போன்று நிர்மலா தேவி புகாரை விசாரிக்க ஆளுநரால் நியமிக்கப்பட்ட சந்தானம் குழு அறிக்கை வெளியிடாமல் மவுனம் காப்பது ஏன்? என்றும் காமராஜர் பல்கலை கழக பேராசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். நிர்மலா தேவி உயிருக்கு ஆபத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில் அரசு இதனை கவனத்தில் எடுத்து உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ll112345

    102 வயதான மூதாட்டி ஸ்கை டைவிங் செய்து புதிய உலக சாதனை!

  • rajini_birthdy

    நடிகர் ரஜினிகாந்தின் 69 வது பிறந்த நாள் ஸ்பெஷல்: ரஜினிகாந்த் அரிய புகைப்படங்கள்!

  • snowfall_kedarnth

    கேதார்நாத்தில் கடும் பனி பொழிவு: உறைபனியில் மூடப்பட்ட கேதார்நாத் கோயில்

  • mukesamba_daugfes

    முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிரமால் திருமண ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி!

  • glassroof_simla

    இயற்கை காட்சிகளை உள்ளிருந்து ரசிக்க வைக்கும் வகையில் ஷிம்லா-கல்கா வரை கண்ணாடி மேற்கூரை கொண்ட ரயில்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்