SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

#MeToo பாலியல் புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்த மூத்த நீதிபதிகள் தலைமையில் குழு அமைக்கப்படும்

2018-10-12@ 16:41:29

புதுடெல்லி: #MeToo பாலியல் புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்த மூத்த நீதிபதிகள் தலைமையில் குழு அமைக்கப்படும் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் இப்போது அரசியல், சினிமா, தொழில்துறை உட்பட பல்வேறு துறைகளை சேர்ந்த  முக்கிய பிரமுகர்கள், தற்போது தூக்கத்தை தொலைத்து, கதி கலங்கி போயுள்ளனர். அதற்கு காரணம், சமூக வலைதளங்களில் மிகவும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ள ‘மீ டூ’ என்ற ‘ஹேஸ்டேக்’தான்.

பல ஆண்டுகளுக்கு முன் தங்களின் அதிகார பலத்தை பயன்படுத்தி, தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் பற்றிய ரகசியங்களை பாதிக்கப்பட்ட பெண்கள் இப்போது இதில் வெளியிட்டு வருகின்றனர். இதில், தங்களால் பாதிக்கப்பட்ட எந்த பெண்ணாவது பழைய ரகசியத்தை வெளியிட்டு விடுவார்களோ என பிரபலங்கள் மிரண்டு போயுள்ளனர். இந்த ‘மீ டூ’வில் 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த பாலியல் துன்புறுத்தல்களை கூட பெண்கள் தைரியமாக பதிவிட்டு வருகின்றனர். இதில், சினிமா பிரபலங்கள், தொலைக்காட்சி நடிகர்கள் என பலர் சிக்கியுள்ளனர். இந்த பட்டியலில் தற்போது அரசியலும் இணைந்து விட்டது.

எம்.ஜே.அக்பர் - பெண் பத்திரிக்கையாளர்கள்


பத்திரிகை துறையில் 40 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த மூத்த பத்திரிக்கையாளரும், மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சருமான எம்.ஜே.அக்பர் மீதும் சில பெண்கள் பாலியல் தொல்லை குற்றச்சாட்டை, ‘மீ டூ’வில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். இதில், அக்பர் மீது பத்திரிகையாளர் பிரியா ரமணி உட்பட 6 பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வைரமுத்து - சின்மயி

பிரபல சினிமா பாடலாசிரியர் வைரமுத்து தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்றதாக பின்னணிப் பாடகி சின்மயி குற்றம் சாட்டினார். இது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இலங்கைத் தமிழர்களுக்காக 'வீழமாட்டோம்' என்ற ஆல்பத்தில் தானும் மாணிக்க விநாயகமும் பாடியிருந்ததாகவும்  இது தொடர்பான வெளியீட்டு விழா, சுவிட்ஸர்லாந்தின் சூரிக் அல்லது பெர்ன் நகரில் நடந்ததாகவும் கூறிய சின்மயி, இந்த விழாவில் தாங்களும் கலந்துகொண்டு பாடியதாகக் கூறியுள்ளார். விழா முடிந்து எல்லோரும் புறப்பட்ட நிலையில், தன்னையும் தன் தாயாரையும் புறப்பட வேண்டாம் எனக் கூறியதாகவும் அப்போது விழா அமைப்பாளர்களில் ஒருவர் வைரமுத்துவை அவரது அறையில் சென்று சந்திக்குமாறு கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

நானா படேகர் - தனுஸ்ரீ தத்தா

கடந்த 2008ஆம் ஆண்டு ஹிந்தி படப்பிடிப்பின் போது நானா படேகனர் பாலியல் தொல்லை அளித்ததாக தனுஸ்ரீ தத்தா குற்றம் சாட்டினார். தன்னைப் போன்றே பல நடிகைகளையும் வன்மத்துடனே அணுகுவதாக குறிப்பிட்டுள்ளார். இவருடன் நடிக்கும் மிகப்பெரிய நடிகர்கள், நடிகைகள் முக்கியமாக கருத வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 16-02-2019

  16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • BrightBrussels

  ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

 • francelemon

  பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

 • TitanicReplicaChina

  முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

 • train18modi

  டெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்