SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீனாவிற்கு அணுசக்தித்தொழில் நுட்பம் வழங்குவதை தடுத்து நிறுத்த அமெரிக்கா நடவடிக்கை

2018-10-12@ 16:30:42

அமெரிக்கா : சீனாவுடன் வர்த்தக போர் தொடங்கி இருக்கும் நிலையில், அந்நாட்டிற்கு அணுசக்தித்தொழில் நுட்பம் வழங்குவதை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னெடுத்திருக்கிறார். தன் நாட்டின் தொழில் நுட்ப அறிவை சட்ட விரோதமான முறையில் சீனா திருடி வருவதாக குற்றம் சாட்டிய  அமெரிக்கா, அந்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்தது. பதிலுக்கு சீனாவும் அமெரிக்க பொருட்கள் மீது  கூடுதல் வரியை விதித்ததால், சர்வதேச அளவில் பொருளாதாரம் மந்த நிலை அடைந்திருப்பதாக சர்வதேச நிதியம் கவலை தெரிவித்திருந்தது. இந்நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கையாக சீனாவிற்கு வழங்கப்படும் அணுசக்தி தொழில்நுட்பத்தை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் டிரம்ப் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

இதனை அமெரிக்காவின் எரிசக்தித்துறை அமைச்சர் உறுதிப்படுத்தியிருக்கிறார். அமெரிக்காவிடம் இருந்து பெற்ற அணுசக்தி தொழில் நுட்பத்தின் மூலம் தென் சீன கடற்பகுதியில் செயற்கை தீவுகளை உருவாக்கி அங்கு அணுசக்தி நிலையங்களை உருவாக்கி வருவதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதனை தடுக்கும் வகையில் அந்நாட்டிற்கு  அணுசக்தி தொழில்நுட்பம் வழங்குவதை நிறுத்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தங்கள் நாட்டில் உள்ள தொழிற்துறைகள் பாதிக்கப்பட்டாலும் அதைப்பற்றி கவலைபட போவதில்லை என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்