SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாகையில் சாலை மறியலில் ஈடுபட்ட 1,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது

2018-10-12@ 15:51:27

நாகை: மானிய டீசல் அளவை உயர்த்தி வழங்க வலியுறுத்தி நாகையில் சாலை மறியலில் ஈடுபட்ட 1000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் மானிய டீசல் அளவை உயர்த்தி வழங்கக் கோரி கடந்த 10 நாட்களுக்கு மேலாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதுவரை அவர்களது கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்காததை கண்டித்து போராட்டத்தை தீவிரப்படுத்தும் விதமாக நாகை மாவட்டம் புதூரில் 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் நாகை, தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பதிக்கப்பட்டது.

மேலும் தமிழக அரசு நினைத்தால் உற்பத்தி விலைக்கே டீசல் வழங்க முடியும் என்றும், எனவே தமிழக அரசு தங்களது கோரிக்கைகளை ஏற்க வேண்டும் என்றும் மீனவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து காவல்துறையின் எச்சரிக்கையை மீறி சாலை மறியலில் ஈடுபட்ட மீனவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஓ.எஸ். மணியன், மீனவர்களுக்கு மானிய டீசலின் அளவை உயர்த்தி வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று கூறியுள்ளார். இதனால் நாகை மீனவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-12-2018

    16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lisbon_tramp11

    லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்