SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கர்நாடகாவில் வகுப்பறைக்குள் ஆசிரியர்கள் இடையே மோதல் : மாணவர்கள் அதிர்ச்சி

2018-10-12@ 15:31:33

கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் தனியார் தலைமை ஆசிரியரும், ஆசிரியையும் வகுப்புக்குள்ளேயே மோதிக்கொண்ட காட்டி வெளியாகி பெற்றோரை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. கன்னட மாவட்டம் சுய்யா என்ற ஊரில் தனியார் பள்ளி ஆசிரியர் பிரேமலதாவுக்கும் அதே பள்ளியில் பணியாற்றி வரும் ரவீந்திரா என்ற  ஹிந்தி ஆசிரியருக்கும் மோதல் இருந்து வந்துள்ளது.

இதனிடையே நேற்று ரவீந்திரா பாட வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த போது அங்கு வழக்கமாக ஆய்வுக்காக சென்ற பிரேமலதா வகுப்பு குறித்து ரவீந்திராவிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தலைமை ஆசிரியை தாக்க முயற்சித்தார். ஆசிரியர்கள் மோதிக் கொண்டதைப் பார்த்த மாணவர்கள் அதிர்ச்சியில் ஒரு மூலையில் பதுங்கி கொண்டனர். இதையடுத்து அருகில் இருந்த மற்ற இரு ஆசிரியர்கள் விலகிவிட்டனர். ஆசிரியர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.        


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

  • TitanicReplicaChina

    முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

  • train18modi

    டெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்