SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முதல்வர் எடப்பாடி மீதான ஊழல் வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு

2018-10-12@ 14:55:08

சென்னை : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஊழல் வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லஞ்ச ஒழிப்பு போலீஸ் முறையாக விசாரிக்காததால் சிபிஐ விசாரணைக்கு மாற்றி ஆணையிட்டுள்ளது. மேலும் இதுவரை விசாரித்த வழக்கு ஆவணங்களை சிபிஐயிடம் லஞ்சஒழிப்புத்துறை ஒப்படைக்க வேண்டும். 3 மாதத்தில் ஆரம்பக்கட்ட விசாரணையை சிபிஐ முடிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நெடுஞ்சாலை ஒப்பந்தங்களை முறைகேடாக உறவினர்களுக்கு எடப்பாடி வழங்கியதாக முதலமைச்சர் எடப்பாடி மீது திமுக வழக்கு தொடர்ந்தது. திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், முதலமைச்சரின் உறவினர் சுப்ரமணியம் என்பவர் பங்குதாரராக உள்ள வெங்கடாஜலபதி அன்ட் கோ என்ற நிறுவனத்துக்கு 3,120 கோடி ரூபாய் மதிப்பிலான நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இதன் மூலம், முதலமைச்சர் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி, எடப்பாடி பழனிசாமி ஆதாயம் அடைந்துள்ளதாகவும் ஆர்.எஸ். பாரதி தனது மனுவில் குற்றம் சாட்டியிருந்தார். எனவே இந்த வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரிக்க உயர் நீதிமன்றம் ஆணையிட்டிருந்தது. இந்நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் முறையாக விசாரிக்காததால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி நீதிபதி ஜகதீஷ்சந்திரா உத்தரவிட்டுள்ளார்.  

தாமே முதலவர் பதவி விலக வேண்டும்

சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதால் ஜனநாயக மரபை மதித்து முதல்வர் தாமே முன்வந்து பதவி விலக வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

அறப்போர் இயக்கம் வரவேற்பு

முதல்வர் மீதான புகார் பற்றி சி.பி.ஐ.விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது வரவேற்கத்தக்கது என்று அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது. மேலும் நீதிமன்ற மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-05-2019

    21-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • russiabicycle

    ரஷ்யாவில் களைகட்டிய பிரம்மாண்ட சைக்கிள் திருவிழா: சுமார் 47,000 பேர் பங்கேற்பு

  • canadaplastic

    கனடாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு கண்காட்சி: கடலில் வீசப்பட்ட பொருட்களை வைத்து கடல்வாழ் உயிரினங்கள் வடிவமைப்பு

  • paradechina

    சீனாவில் ஆசிய கலாச்சார திருவிழா 2019: பல நாடுகளின் நாகரிகங்களை பறைசாற்றும் வகையில் அணிவகுப்பு

  • buddhapurnima

    புத்தர் அவதரித்த தினமான புத்த பூர்ணிமா பண்டிகை உலகமெங்கும் விமர்சையாக கொண்டாடப்பட்டது: புகைபடங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்