SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் எம்.பி ரமேஷ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை

2018-10-12@ 13:06:30

ஹைதராபாத் :  தெலுங்கு தேசம் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் அந்த கட்சியின் எம்.பியுமான சி.எம். ரமேஷின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ரமேஷின் சொந்த ஊரில் இருக்கும் வீடு மற்றும் ஹைதராபாத்தில் அமைத்துள்ள வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. வருமான வரித்துறை அதிகாரிகள் 60 பேர் இந்த சோதனையில் ஈடுபட்டிருக்கின்றனர். வருமான வரிச்சோதனை நடைபெறும் தகவல் டெல்லியில் இருக்கும் ரமேஷுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு நாடாளுமன்றத்தில் கடுமையாக போராடி வருவதாக அவர் தெரிவித்தார். இதனால் அவரது வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக அவர் குற்றம் கூறியுள்ளார்.

தொழில் வளர்ச்சியைத் தடுக்க வேண்டும் என்ற மத்திய அரசின் சதி இந்த சோதனைகளின் பின்னணியில் உள்ளது என அவர் கூறியுள்ளார். இதேபோல் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சுஜான சௌத்திரி வீட்டில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று எம்.பி ரமேஷ் வீட்டில் சோதனை நடைபெறுவது தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னதாக சில தினங்களுக்கு முன்பு தெலுங்கு தேசம் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான நெல்லூரைச் சேர்ந்த பீட்டா வஸ்தான் ராவ் மற்றும் பீட்டா ரவிச்சந்திரா ஆகியோரின் தொழில் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். மத்தியில் ப.ஜ.க கூட்டணியிலிருந்து விலகியதிலிருந்து மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திர பாபு நாயுடு கடுமையாக எதிர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mexicovalcano

    மெக்ஸிகோவில் எரிமலை வெடித்ததில் 8 ஆயிரம் அடி உயரத்திற்கு புகை மண்டலம் : பொதுமக்கள் வெளியேற்றம்

  • modipuja

    உத்தர பிரதேசத்தில் கும்பமேளா நடக்கவுள்ள நதிகரையில் பிரதமர் மோடி பூஜை செய்து வழிபாடு

  • animalsmuggling

    இந்தோனேசியா துறைமுகத்தில் சட்டவிரோதமாக கடத்த முயன்ற பல்வேறு உயிரினங்கள் மீட்பு

  • swimminggeneva

    ஜெனீவாவில் கிறித்துமஸ் தினத்தை முன்னிட்டு நீச்சல் போட்டி : நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

  • Cairoegyptopen

    மம்மிகளின் உலகமான எகிப்தில் 4400 ஆண்டு பழமை வாய்ந்த பிரமீடு கெய்ரோவில் திறக்கப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்