SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வத்தலக்குண்டு அருகே ஓடைகளை சீரமைக்கும் பணி மும்முரம்

2018-10-12@ 12:59:15

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு அருகே ஓடைகளை சீரமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. பணியை மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குநர் நேரில் ஆய்வு செய்தார். வத்தலக்குண்டு அருகே கோம்பைப்பட்டி ஊராட்சி ரெட்டியபட்டி குடிநீரேற்று நிலையம் அருகே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வடகிழக்கு பருவமழை வருவதையொட்டி ஓடைகளை சீரமைக்கும் பணி நடந்தது.

இதில் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பங்கேற்று ஓடையை சீரமைத்தனர். சீரமைக்கும் பணியை மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குநர் கருப்பையா வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேதா, விஜயசந்திரிகா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகாராஜன், ஊராட்சி செயலாளர் மணிகண்டன் ஆகியோர் பார்வையிட்டனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ll112345

    102 வயதான மூதாட்டி ஸ்கை டைவிங் செய்து புதிய உலக சாதனை!

  • rajini_birthdy

    நடிகர் ரஜினிகாந்தின் 69 வது பிறந்த நாள் ஸ்பெஷல்: ரஜினிகாந்த் அரிய புகைப்படங்கள்!

  • snowfall_kedarnth

    கேதார்நாத்தில் கடும் பனி பொழிவு: உறைபனியில் மூடப்பட்ட கேதார்நாத் கோயில்

  • mukesamba_daugfes

    முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிரமால் திருமண ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி!

  • glassroof_simla

    இயற்கை காட்சிகளை உள்ளிருந்து ரசிக்க வைக்கும் வகையில் ஷிம்லா-கல்கா வரை கண்ணாடி மேற்கூரை கொண்ட ரயில்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்