SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இரட்டை இலை சின்னம் லஞ்ச வழக்கு : இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் நீதிமன்றத்தில் ஆஜர்

2018-10-12@ 12:54:39

டெல்லி : இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்ற வழக்கில் விசாரணை தொடங்கியது. சிபிஐ தாக்கல் செய்த குற்றபத்திரிக்கை மீது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. லஞ்சம் கொடுக்க முயன்றது தொடர்பாக கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் கடந்த டிசம்பர் 21-ம் தேதி நடந்தது. அப்போது இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் வழங்கியதாக டி.டி.வி.தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் டி.டி.வி.தினகரன் அவரது நண்பர் மல்லிகார்ஜூனா, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், நரேஷ், லலித்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் சுகேஷ் சந்திரசேகர் தவிர மற்றவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

முன்னதாக இந்த வழக்கை நீதிபதி அரவிந்த்குமார் அமர்வு விசாரணை நடத்தி வந்தது. பின்னர் அரவிந்த்குமார் அமர்விலிருந்து டெல்லி சிறப்பு நீதிபதி அருண் பரத்வாஜ் அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்தநிலையில் சுகேஷ் என்பவர் மூலம் டி.டி.வி. தினகரன் லஞ்சம் தர முயன்றதற்கு ஆதாரங்கள்  தங்களிடம் உள்ளதாக பாட்டியாலா நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

  • TitanicReplicaChina

    முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

  • train18modi

    டெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்