SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொடர் மழையால் வைக்கோல் விலை வீழ்ச்சி : வயல்களுக்கு உரமாக்கும் விவசாயிகள்

2018-10-12@ 12:22:23

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பப்பூ என இருபோக நெல்சாகுபடி நடந்து வருகிறது. தற்போது கன்னிப்பூ அறுவடை நடந்து வருகிறது. குளத்து பாசன பகுதியில் அறுவடை முடிந்துள்ளது. ஆற்றுப்பாசன பகுதிகளில் தற்போது அறுவடை தயாரான நிலையில், மழை பெய்து வருவதால், நெல்பயிர்கள் தண்ணீரில் மிதக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த கும்பப்பூ  அறுவடையின் போது நெல்லுக்கு போதிய விலை கிடைக்கவில்லை. இருப்பினும், வைக்கோலுக்கு நல்ல விலை கிடைத்தது. 1 ஏக்கர் நிலப்பரப்பில் அறுவடை செய்யப்பட்ட வைக்கோல் 10 ஆயிரம் வரை விலைபோனது. கேரள வியாபாரிகள் மற்றும் குமரி மாவட்ட வியாபாரிகள் அதிக அளவு  வைக்கோல் வாங்கிச்சென்றனர்.

ஆனால் இந்த கன்னிப்பூ அறுவடையில் வைக்கோலுக்கு போதிய விலை கிடைக்கவில்லை. அறுவடை தொடங்கிய நாள் முதல் கேரளாவிலும், குமரியிலும் மழை பெய்து வருகிறது. இதனால் வைக்கோல்கள் நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. வைக்கோல்களை மாடு வளர்ப்போர் வாங்கிச்செல்லவில்லை. ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் அறுவடை செய்யப்பட்ட வைக்கோல் 1500 முதல் 2 ஆயிரம் வரையே விலைபோகிறது. கடந்த சில நாட்களாக பெய்த மழையால் புளியடி உள்பட பல இடங்களில் நெற்பயிர்கள் தண்ணீர் மூழ்கி கிடக்கிறது. இதனால் விவசாயிகள் விளை நிலத்தில் இருந்து தண்ணீரை வெளியேற்றிவிட்டு, நெல்மணிகளையாவது அறுவடை செய்து எடுத்துவிட நினைக்கின்றனர். சேறு சகதியுமான வைக்கோல்களை வயல்களுக்கு உரமாக்கிவிடவும் விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். இதனால் கன்னிப்பூ அறுவடையில் விவசாயிகள் பலத்த நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ll112345

    102 வயதான மூதாட்டி ஸ்கை டைவிங் செய்து புதிய உலக சாதனை!

  • rajini_birthdy

    நடிகர் ரஜினிகாந்தின் 69 வது பிறந்த நாள் ஸ்பெஷல்: ரஜினிகாந்த் அரிய புகைப்படங்கள்!

  • snowfall_kedarnth

    கேதார்நாத்தில் கடும் பனி பொழிவு: உறைபனியில் மூடப்பட்ட கேதார்நாத் கோயில்

  • mukesamba_daugfes

    முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிரமால் திருமண ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி!

  • glassroof_simla

    இயற்கை காட்சிகளை உள்ளிருந்து ரசிக்க வைக்கும் வகையில் ஷிம்லா-கல்கா வரை கண்ணாடி மேற்கூரை கொண்ட ரயில்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்