வேலை நாட்களில் நீதிபதிகள் விடுமுறை எடுக்கத் தடை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு
2018-10-12@ 11:52:22

புதுடெல்லி: நீதிமன்றங்களில் தேங்கி கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க நீதிபதிகள் வேலை நாட்களில் விடுமுறை எடுக்க வேண்டாம் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் கட்டுப்பாடு விதித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் வழக்குகள் பல ஆண்டுகளாக தீர்வு எட்டப்படாமல் தேங்கிக்கிடக்கின்றன. உச்சநீதிமன்றத்தில் 55,000 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதேபோன்று நாடு முழுவதும் உள்ள 24 உயர்நீதிமன்றங்களில் 32.04 லட்சம் வழக்குகளும், கீழமை நீதிமன்றங்களில் 2.77 கோடி வழக்குகளும் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து முடிக்க, நோ லீவ் பார்முலாவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கொண்டுவந்துள்ளார். அதன்படி அவசர காலங்களை தவிர நீதிமன்ற வேலை நாட்களில் நீதிபதிகள் விடுமுறை எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை அவர் விதித்துள்ளார். மேலும் விடுமுறை எடுக்கும் நீதிபதிகளிடம் இருந்து வழக்குகள் தொடர்பான கோப்புகளை எடுத்து விடுமாறும் அவர் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் செய்திகள்
கிரண்பேடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : குடியரசு தலைவர், பிரதமருக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடிதம்
துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து நாராயணசாமி தலைமையில் 4-வது நாளாக தர்ணா போராட்டம்
புல்வாமா தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்
வங்கதேச பிரதமர் ஹசினா அறிவிப்பு இளைஞர்களுக்கு வழி விட ஓய்வு பெற விரும்புகிறேன்
உச்ச நீதிமன்றம் உத்தரவு பாஜ அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியாது
போக்ரான் அருகே விமானப் படை இன்று பிரமாண்ட போர் பயிற்சி
16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்
பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு
முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு
டெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி