SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க தேர்தல் வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பணம்‘வாட்ஸ் அப்’ காட்சியால் பரபரப்பு: அமைச்சர் தலையீடு என ஒரு பிரிவினர் குற்றச்சாட்டு

2018-10-12@ 03:14:09

திருவண்ணாமலை: திருவண்ணாமலை வேங்கிக்கால் வேளாண்மை உற்பத்தியாளர் விற்பனை சங்கத்திற்கான நிர்வாகக்குழு தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்ட காட்சிகள், வாட்ஸ் அப்பில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை வேங்கிக்கால் வேளாண்மை உற்பத்தியாளர் விற்பனை சங்கத்திற்கான நிர்வாகக்குழு தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில், அதிமுக மாவட்ட செயலாளர், நகர செயலாளரின் ஆதரவு வேட்பாளர்கள் மற்றும் திமுக சார்பில் என 24 பேர் போட்டியிட்டனர். கடந்த ஓராண்டாக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் பெருமாள்நகர் ராஜன், நகர செயலாளர் ஜெ.செல்வம் ஆகியோருக்கு இடையே திரைமறைவாக இருந்த கோஷ்டி மோதல், இந்த  தேர்தலில் ் வெளிப்படையாக தெரிந்தது.  அதையொட்டி, அதிமுக கோஷ்டி மோதல் நடைபெறாமல் தவிர்க்க, டிஎஸ்பி அண்ணாதுரை தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து நீண்ட வரிசையில் காத்திருந்த உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

அப்போது, அதிமுகவினர் கையில் ரூ500 நோட்டு கட்டுகளை வைத்தபடி, வாக்காளர்களை வரிசையாக அழைத்து, பட்டியலில் பெயர் சரிபார்த்து தலா ரூ500 வழங்கினர். இந்த காட்சிகள் அடங்கிய செல்போன் ‘வாட்ஸ் அப்’ வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. . இது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், இத்தேர்தலை ரத்து செய்யும்படி கோரிக்கை வலுத்துள்ளது. அமைச்சர் - எம்எல்ஏ ஆதர வாளர்கள் மோதல்: கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த விழமங்கலம் பகுதியில் பண்ருட்டி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் (சிஎம்எஸ்) தேர்தல் நேற்று நடந்தது. இதில்,  அமைச்சர் சம்பத் ஆதரவாளர்களுக்கும்.  பண்ருட்டி எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும் மோதல்ஏற்பட்டது. அமைச்சர் ஆதரவாளர்கள் வாக்கு சீட்டுகள், வாக்காளர் பட்டியலை பறித்து கிழித்து எறிந்தனர். அங்கு மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானதால், தேர்தலை ரத்து செய்வதாக அதிகாரி சங்கீதா அறிவித்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

  • gold_navaratchri11

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

  • balore_arrrres1

    சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது

  • gasa_vanvali111

    காசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்