SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் முக்கிய திட்டங்களுக்கு பொதுமக்களின் கருத்து கேட்காமல் அனுமதியா? அரசுக்கு டிடிவி.தினகரன் கண்டனம்

2018-10-12@ 02:55:01

சென்னை: தமிழ்நாட்டில் முக்கிய திட்டங்களுக்கு மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தாமலேயே அனுமதி வழங்க வேண்டுமென தமிழக அரசு மத்திய அரசிடம் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக டிடிவி.தினகரன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நடைபெறுவது மக்கள் விரோத அரசு என்பதை ஒவ்வொரு நொடியும் நிரூபிக்கும் பழனிச்சாமி அரசின் மற்றொரு பாதக செயல்தான், மக்களின் கருத்து கேட்காமலேயே எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய்கள் பதிக்கும் திட்டம் உட்பட பல்வேறு முக்கிய திட்டங்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சரிடம், தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் கொடுத்திருக்கும் கோரிக்கை மனு எடுத்துரைக்கிறது.

மக்களின் கருத்துக்கேட்பு கூட்டங்களால், ஏற்படும் காலதாமதத்தால், முதலீட்டாளர்கள் நஷ்டப்படுகிறார்கள் என்று கூறுவது இந்த அரசு யாருக்காக இயங்கி கொண்டிருக்கிறது என்பதை தெள்ளத் தெளிவாக காட்டுகிறது. மக்களின் கருத்துக்கேட்பு என்பது முக்கிய திட்டங்களுக்கு அவசியமானது என்று இந்திய அரசியலமைப்பு சட்டமும் வழிவகை செய்துள்ள போதிலும், அதை மறுக்கும் இந்த அரசின் நடவடிக்கைகள் மக்கள் விரோதமானது மட்டுமல்ல சட்டவிரோதமானதும். வேதாந்தா போன்ற தனியார் குழுமங்கள் தங்கு தடையின்றி தங்களது சொந்த லாபத்திற்காக தமிழகத்தில் வணிகம் செய்வதற்கு மத்திய அரசிடம் தமிழக அரசு இக்கோரிக்கையினை முன்வைத்துள்ளது, மக்கள் விரோத பழனிசாமி அரசின் இரட்டைவேடத்தையே  காட்டுகிறது.

விவசாயத்தை அழிப்பதற்கும், இயற்கை வளங்களை நாசமாக்கும் திட்டங்களுக்காகவும், மக்களின் நலனையும், மக்களின் குரலையும், நசுக்க நினைக்கும் பழனிச்சாமி அரசின் இப்போக்கிற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதோடு, ஜனநாயகம் எல்லா நிலைகளிலும் காக்கப்பட, மக்களின் கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்தப்படவேண்டும் என்றும், மத்திய அரசின் முன் வைத்த இந்த மக்கள் விரோத வஞ்சக கோரிக்கையை பழனிச்சாமி அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-05-2019

    21-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • russiabicycle

    ரஷ்யாவில் களைகட்டிய பிரம்மாண்ட சைக்கிள் திருவிழா: சுமார் 47,000 பேர் பங்கேற்பு

  • canadaplastic

    கனடாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு கண்காட்சி: கடலில் வீசப்பட்ட பொருட்களை வைத்து கடல்வாழ் உயிரினங்கள் வடிவமைப்பு

  • paradechina

    சீனாவில் ஆசிய கலாச்சார திருவிழா 2019: பல நாடுகளின் நாகரிகங்களை பறைசாற்றும் வகையில் அணிவகுப்பு

  • buddhapurnima

    புத்தர் அவதரித்த தினமான புத்த பூர்ணிமா பண்டிகை உலகமெங்கும் விமர்சையாக கொண்டாடப்பட்டது: புகைபடங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்