SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மோடி ஒரு ஊழல்வாதி ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு

2018-10-12@ 02:14:47

புதுடெல்லி: ‘‘பிரதமர் மோடி ஒரு ஊழல்வாதி’’ என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாக குற்றஞ்சாட்டி உள்ளார். ராகுல் காந்தி டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: ரபேல் ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.30 ஆயிரம் கோடி கிடைக்க பிரதமர் மோடி உதவியுள்ளார். இதை மறைப்பதற்காகத்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரான்சுக்கு 3 நாள் பயணம் சென்றுள்ளார். அவர் பிரான்சுக்கு திடீர் பயணம் மேற்கொண்டது ஏன்? என்ன அவசரம்? உண்மை நிலவரம் என்னவென்றால்,  பிரதமர் மோடி ஒரு ஊழல்வாதி. டசால்ட் நிறுவனத்துக்கு அழுத்தம் கொடுத்து, அவர்களை பேசவிடாமல் செய்து உண்மையை மறைப்பதற்காக நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் சென்றுள்ளார். மீடியாக்களுக்கும் அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

ரபேல் விவகாரத்தில் போதுமான ஆதாரங்கள் உள்ளதால், உண்மை வெளிவரும். இந்தியப் பிரதமர் ஊழல்வாதி என கூறியவர் வேறு யாருமல்ல, பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ஹாலண்டே. ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்தை சேர்க்கும் சமரசம் இல்லாமல் இந்த ஒப்பந்தம் செய்ய முடியாது என பிரதமர் மோடி கூறியதாக ஹாலண்டேவும், டசால்ட் நிறுவன மூத்த அதிகாரியும் கூறியுள்ளனர். இந்த விஷயத்தில் மோடி மவுனம் காக்கிறார். இந்த விஷயத்தில் அழுத்தம் இருப்பது தெளிவாக தெரிகிறது. பதில் அளிக்க முடியவில்லை என்றால், அவர் ராஜினாமா செய்ய வேண்டும்். இவ்வாறு ராகுல் கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்