SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்: கட்டிடம் இடிந்து 3 பேர் பலி

2018-10-12@ 02:11:08

ஜகர்தா: இந்தோனேஷியாவின் ஜாவா, பாலி தீவுகளில் நேற்றும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6 புள்ளிகளாக இது பதிவானது.
இந்தோனேஷியாவின் சுலேவேசி தீவில் கடந்த மாதம் இறுதில் சக்தி வாய்ந்த நிலநடுக்கமும், அதைத் தொடர்ந்து பயங்கர சுனாமியும் தாக்கின. இதில், 2000 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். பல ஆயிரம் பேர் காணவில்லை. இதில் வீடுகளையும், குடும்பத்தினரையும் இழந்த மக்கள் இன்னும் முகாம்களிலும், திறந்தவெளி பகுதிகளில் கூடாரங்கள் அமைத்தும் தங்கியுள்ளனர்.இந்த சோகம் தீராத நிலையில், இந்நாட்டில் உள்ள ஜாவா, பாலி தீவுகளில் நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவுகோளில் 6 புள்ளிகளாக பதிவானது. அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். தூக்கத்தில் இருந்ததால் அவர்களால் உடனடியாக வெளியேற முடியவில்லை. இந்த நிலநடுக்கத்தால் சுபினேப் மாவட்டத்தில் கட்டிடம் இடிந்து 3 பேர் உயிரிழந்தனர்.
இதேபோல், பாலி தீவில் உள்ள தென்பசாரிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. அச்சமடைந்த பொதுமக்கள் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறினார்கள். கிழக்கு ஜாவாவின் தலைநகர் சுரபயாவிலும் இந்த நிலநடுக்கத்தை 10 வினாடிகள் பொதுமக்கள் உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர். நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்