SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராஜிவ்காந்தி புகழை கெடுக்கும் மத்திய அரசை கண்டித்து போராட்டம்: திருநாவுக்கரசர் எச்சரிக்கை

2018-10-12@ 02:09:08

சென்னை:  தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஸ்ரீபெரும்புதூரில் ராஜிவ்காந்தி நினைவை போற்றுகிற வகையில் ராஜிவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையம் 1993ம் ஆண்டு நிகர்நிலை பல்கலைக் கழகமாக தொடங்கப்பட்டது. பிறகு 2012ம் ஆண்டு நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் உயர்நிலை தேசிய கல்வி நிலையமாக உருவாக்கப்பட்டது. அங்கு படிக்கின்ற மாணவர்கள் அங்கு நிலவுகிற வசதி குறைவு காரணமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து அங்கு ஆய்வு செய்தபோது கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியை தருகின்றன. மத்தியில் பாஜ ஆட்சி அமைந்தவுடன் இந்த நிறுவனத்தின் முக்கியத்துவத்தை குறைக்கிற வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இக்கல்வி நிறுவனம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே அனைத்து படிவங்களிலும் ராஜிவ்காந்தியின் படத்துடன் இடம் பெற்றிருந்த லோகோ சமீபகாலத்தில் அகற்றப்பட்டிருக்கிறது.

வளாகத்தில் சாம்பல் நிறத்தில் வைக்கப்பட்டிருந்த போர் விமானத்திற்கு நேற்று காவி வண்ணம் பூசப்பட்டிருக்கிறது. கருத்தரங்கு கூடத்தில் வைக்கப்பட்டிருந்த ராஜிவ்காந்தியின் உருவப்படம் அகற்றப்பட்டிருக்கிறது.  இந்நிறுவனத்திற்கு முதல்வரோ, பேராசிரியர்களோ, இயக்குநர்களோ பல மாதங்களாக நியமிக்கப்படவில்லை.  இத்தகைய போக்கு தொடர்ந்து நீடிக்குமேயானால் இந்த அமைப்பின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டு விடும். ராஜிவ்காந்தியின் புகழை மறைக்கின்ற வகையில் மத்திய பாஜ அரசு செயல்படுகிறது. தமிழகத்தில் அமைந்துள்ள இந்த கல்வி நிறுவனத்தில் நிலவுகிற சீர்கேடுகளை களைவதற்கு தமிழக அரசு, மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். ராஜிவ்காந்தியின் புகழை போற்றுகிற வகையில் நிறுவப்பட்ட ராஜிவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தில் நிலவுகிற குளறுபடிகளை களைய மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் போராட்டத்தில் ஈடுபட நேரிடும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mexicovalcano

  மெக்ஸிகோவில் எரிமலை வெடித்ததில் 8 ஆயிரம் அடி உயரத்திற்கு புகை மண்டலம் : பொதுமக்கள் வெளியேற்றம்

 • modipuja

  உத்தர பிரதேசத்தில் கும்பமேளா நடக்கவுள்ள நதிகரையில் பிரதமர் மோடி பூஜை செய்து வழிபாடு

 • animalsmuggling

  இந்தோனேசியா துறைமுகத்தில் சட்டவிரோதமாக கடத்த முயன்ற பல்வேறு உயிரினங்கள் மீட்பு

 • swimminggeneva

  ஜெனீவாவில் கிறித்துமஸ் தினத்தை முன்னிட்டு நீச்சல் போட்டி : நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

 • Cairoegyptopen

  மம்மிகளின் உலகமான எகிப்தில் 4400 ஆண்டு பழமை வாய்ந்த பிரமீடு கெய்ரோவில் திறக்கப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்