SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிமுக சட்டவிதிகளில் செய்த திருத்தத்தை தேர்தல் ஆணையம் ஏற்கக்கூடாது: சசிகலா தரப்பு பதில் மனு தாக்கல்

2018-10-12@ 02:00:24

புதுடெல்லி: அதிமுக சட்டவிதிகளில் செய்யப்பட்ட திருத்தம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் சசிகலா தரப்பினர் தங்கள் விளக்கத்தை அளித்தனர். அப்போது அந்த திருத்தத்தை ஏற்கக் கூடாது என்று வலியுறுத்தினர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் புதிதாக உருவாக்கப்பட்டன. இதற்காக கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில் “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு உடன்படவில்லை என்றால் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு அதிமுக அரசு ஆதரவளிக்கும்” என்று அதிமுகவின் அப்போதையை செய்தித் தொடர்பாளர் கே.சி.பழனிசாமி தெரிவித்ததால் அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நிக்கப்பட்டார்.

இதையடுத்து அதிருப்தியடைந்த அவர் அதிமுக கட்சி விதிகளில் செய்த திருத்தங்களை ரத்து செய்யக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், “வழக்கு தொடர்பாக 3 வாரத்தில் மனுதாரர் உட்பட அனைவரும் தங்களது கருத்துக்களை தலைமை தேர்தல் ஆணையத்தில் எழுத்துப்பூர்வ பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும். இதையடுத்து அனைத்து பிரமாண பத்திரங்களையும் பரிசீலனை செய்து அடுத்த 4 வாரத்தில் வழக்கின் இறுதி உத்தரவை தலைமை தேர்தல் ஆணையம் பிறப்பிக்க வேண்டும்” என கடந்த மாதம் 13ம் தேதி உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் சார்பாக தமிழக சட்டத்துறை அமைச்சர் சிவி.சண்முகம் தேர்தல் ஆணையத்தில் பதில் மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலா சார்பில் அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தலைமை தேர்தல் ஆணையத்தில் நேற்று ஒரு பதில் மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில்,”அ.தி.மு.க கட்சி விதிகளில் செய்த மாற்றங்கள் என்பதை கண்டிப்பாக தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள கூடாது. மேலும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவிக்கு அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் மூலம் உடனடியாக தேர்தல் நடத்த ஆணையம் உத்தரவிட வேண்டும்” என அதில் குறிப்பிடப்பட்டது.

அதிமுகவின் அங்கம் தான் அமமுக
வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘இன்றைய தினம் சசிகலா தரப்பு பதில் மனுவை தாக்கல் செய்துள்ளோம். அதிமுகவின் தற்போதைய பொதுச்செயலாளர் சசிகலா தான். அவர் தொடர்ந்து கட்சியின் உறுப்பினராகவும் இருந்து வருகிறார். அதனால் அ.தி.மு.க. சட்டத்திருத்தில் கொண்டு வரப்பட்ட மாற்றங்கள் எதுவும் செல்லாது. இதைத்தவிர ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன், செம்மலை ஆகியோர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களே கிடையாது. அதிமுகவின் ஒரு அங்கம் தான் டிடிவி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம். அது ஒன்றும் தனி கட்சி கிடையாது” என்று கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-05-2019

  21-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • russiabicycle

  ரஷ்யாவில் களைகட்டிய பிரம்மாண்ட சைக்கிள் திருவிழா: சுமார் 47,000 பேர் பங்கேற்பு

 • canadaplastic

  கனடாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு கண்காட்சி: கடலில் வீசப்பட்ட பொருட்களை வைத்து கடல்வாழ் உயிரினங்கள் வடிவமைப்பு

 • paradechina

  சீனாவில் ஆசிய கலாச்சார திருவிழா 2019: பல நாடுகளின் நாகரிகங்களை பறைசாற்றும் வகையில் அணிவகுப்பு

 • buddhapurnima

  புத்தர் அவதரித்த தினமான புத்த பூர்ணிமா பண்டிகை உலகமெங்கும் விமர்சையாக கொண்டாடப்பட்டது: புகைபடங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்