SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இறப்பதற்கு முன் கண் தானம் செய்த திமுக பிரமுகர் மகளுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

2018-10-12@ 00:30:09

சென்னை: இறப்பதற்கு முன் கண்களை தானம் செய்த திமுக பிரமுகரின் மகள் தமிழ் செல்விக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தை சேர்ந்த திமுக பிரமுகர் ராமலிங்கம். இவரது மகள் தமிழ்செல்வி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இறப்பதற்கு முன்பாக அவர் தனது கண்களை தானம் செய்து விடுமாறு பெற்றோரை கேட்டுக் கொண்டார். அதன்படி அவரது கண்கள் தானம் செய்யப்பட்டன.

இதுகுறித்து டிவிட்டரில் மு.க.ஸ்டாலின்  கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் திமுக உடன்பிறப்பு மகள், உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் தனது கண்களை தானம் செய்து விட்டு மறைவெய்திய செய்தி அறிந்து கண் கலங்கினேன். இத்தகைய விழிப்புணர்வை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கவே நானும் பதிவு செய்துள்ளேன். திமுகவினரும் உடல், உறுப்பு தானம் செய்திட வேண்டும் என்று விரும்புகிறேன்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-02-2019

    24-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-02-2019

    23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்