SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரூ3500 கோடி செலவாகும் என்பதால் மின்சார ரயில்களில் தானியங்கி கதவு சாத்தியமில்லை: ஐகோர்ட்டில் தெற்கு ரயில்வே அறிக்கை

2018-10-12@ 00:29:25

சென்னை: சென்னை உள்ள மின்சார ரயில்களில் தானியங்கி கதவுகள் பொருத்த ரூ3500 கோடி செலவாகும் என்பதால், தற்போது அது சாத்தியமில்லை என்றும், புதிதாக தயாரிக்கப்படும் பெட்டிகளில் கதவுகளை பொறுத்துவது குறித்து ரயில்வே வடிவமைப்பு வாரியம்தான் முடிவெடுக்க வேண்டும் என்று தெற்கு ரயில்வே சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. சென்னை பரங்கிமலையில் மின்சார ரயில் விபத்தில் சிக்கி 6 பேர் பலியானதை தொடர்ந்து, மெட்ரோ ரயில்களை போன்று சென்னையில் இயக்கப்படும் அனைத்து மின்சார ரயில்களின் பெட்டிகளிலும் தானியங்கி கதவுகளை பொருத்த ரயில்வேக்கு உத்தரவிட வேண்டுமென வக்கீல் சதீஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், மின்சார ரயில்களில் தானியங்கி கதவுகள் பொருத்துவது குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தெற்கு ரெயில்வே துணை முதன்மை மின் பொறியாளர் அனில்குமார் பாஞ்சியார் சார்பில் வக்கீல் பி.டி.ராம்குமார் அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது: சென்னையில் இயங்கும் மின்சார ரயில்களில் தானியங்கி கதவுகள் பொருத்த ரூ3500 கோடி  செலவாகும் என்பதால் தற்போதைக்கு அந்த வசதி செய்து தர சாத்தியமில்லை. புதியதாக தயாரிக்கப்படும் ரயில் பெட்டிகளில் மட்டுமே தானியங்கி கதவுகள் பொருத்த முடியும். தானியங்கி கதவுகள் பொருத்தும் பட்சத்தில் ரயில்களில் காற்றோட்டம் இருக்காது. தானியங்கி கதவுகள் பொருத்தினால் குளிர்சாதன வசதி செய்ய வேண்டியிருக்கும். சென்னை ரயில்களில் உள்ள கூட்ட நெரிசல், பருவ நிலை மாற்றம் ஆகியவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

மும்பையில் 6 மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட தானியங்கி கதவுகள் கொண்ட பெட்டிகள் கொண்ட ரயில்களில் கட்டணம் சென்னையை விட 10 மடங்கு அதிகமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. அனைத்து ரயில்களிலும் தானியங்கி கதவு பொருத்துவதற்கு ரூ3,500 கோடி செலவாகும் என்பதால் இப்போது சாத்தியமில்லை. வடிவமைப்பை மாற்றியமைக்க டெல்லியில் உள்ள ரயில்வே வாரியமும், லக்னோவில் உள்ள ரயில்வே வடிவமைப்பு கழகமும் இணைந்து முடிவு செய்ய வேண்டும். அதை பொருத்து வடிவங்களை மாற்றலாமா, வேண்டாமா என முடிவெடுப்பது தெற்கு ரயில்வேயின் கொள்கை முடிவு சார்ந்த விஷயம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை நவம்பர் மாதம் 12ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • MadridSantaClausMarathon

    புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு நிதி திரட்ட கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து மாரத்தான் ஓட்டம்: ஸ்பெயினில் நெகிழ்ச்சி!

  • NorthCarolinaStorm

    அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலங்களை தாக்கிய பனிப்புயலால் வெந்நிற ஆடை உடுத்தியது போல் காட்சியளிக்கும் நகரங்கள்!

  • kumbamela

    12 ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா திருவிழாவிற்கான பணிகள் முழுவீச்சில் தொடக்கம்

  • hariyanaperison

    ஹரியானாவில் கைதிகளின் திறமைகளை வெளிக்கொணரும் சிறைத்துறை: புது முயற்சியில் களமிறங்கிய பொன்ட்சி சிறை

  • Guatemalachrismas

    கிறிஸ்துமஸை வரவேற்கும் விதமாக, கவுதமாலாவில் பேய் பொம்மைகளை தீ வைத்து கொளுத்தும் பாரம்பரிய திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்