SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ184 உயர்ந்தது: மேலும் அதிகரிக்க வாய்ப்பு

2018-10-12@ 00:27:50

சென்னை: தங்கம் விலை நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூ184 உயர்ந்தது. மேலும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் கூறியுள்ளனர். இந்த மாத தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை உயர்ந்து வந்தது. இந்த மாதம் 5 நாட்களில் சவரனுக்கு ரூ744 அளவுக்கு உயர்ந்தது. இந்நிலையில் கடந்த 8ம் தேதி தங்கம் சவரனுக்கு ரூ216 சரிந்து ரூ23,848 ஆனது. அதன் பிறகு 9ம் தேதி ரூ23,776 எனவும், நேற்று முன்தினம் ரூ23,744 எனவும் 3 நாட்களில் சவரனுக்கு ரூ320 குறைந்தது.

நேற்று கிராமுக்கு ரூ23 உயர்ந்து ஒரு கிராம் ரூ2,991க்கும், சவரனுக்கு ரூ184 உயர்ந்து ஒரு சவரன் ரூ23,928க்கும் விற்கப்பட்டது. இதுகுறித்து சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறுகையில், ‘‘இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, உலக சந்தையில் தங்கம் விலை உயர்வே இதற்கு காரணம். வரும் நாட்களில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்கும். கிராம் மீண்டும் ரூ3,000ஐ தாண்டும் என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்