SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நான்காவது தொழில் புரட்சி வேலைவாய்ப்புகளை பெருக்கும்: பிரதமர் மோடி பேச்சு

2018-10-12@ 00:26:37

புதுடெல்லி: ‘‘நான்காவது தொழில் புரட்சி வேலையின் தன்மையை மாற்றி, அதிக வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும்’’ என உலக பொருளாதார அமைப்பு கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். உலக பொருளாதார அமைப்பின் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது: நான்காவது தொழில்புரட்சியின் பயனை பெறுவதற்காக, கொள்கை திட்டங்களை மாற்ற எனது அரசு தயாராக இருக்கிறது. நமது பன்முகத்தன்மை, மனிதவளம், வேகமாக வளரும் சந்தை, டிஜிட்டல் கட்டமைப்பு ஆகியவை இந்தியாவை உலக ஆராய்ச்சி மற்றும் அமல்படுத்தும் மையமாக மாற்றும். இதற்கு முந்தைய தொழிற்புரட்சி, இந்தியாவைத் தவிர்த்தாலும், 4வது தொழிற்புரட்சியின் இந்தியாவின் பங்களிப்பு ஆச்சர்யமாக இருக்கும். முதலாவது மற்றும் 2வது தொழிற்புரட்சி ஏற்பட்டபோது, இந்தியா சுதந்திரம் அடையவில்லை. 3வது தொழிற்புரட்சி நடந்தபோது, இந்தியா சுதந்திரம் பெற்றிருந்தது. அப்போது சவால்களை எதிர்கொள்ள இந்தியா திணறியது.

செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கல்வி, இன்டர்நெட், பிளாக்செயின் மற்றும் பிக்டேட்டா ஆகியவை இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லும். இந்தியாவில் தொலைத் தொடர்பு உபயோகம் 93 சதவீதம் அதிகரித்துள்ளது. 50 கோடி இந்தியர்களிடம் மொபைல் போன் உள்ளது. உலகிலேயே மொமைல் டேட்டாவை அதிகம் பயன்படுத்தும் நாடு இந்தியா. 50 கோடி இந்தியர்கள் மொபைல் வைத்துள்ளனர். மொபைல் டேட்டா பயன்பாடு கடந்த 4 ஆண்டுகளில் 30 மடங்கு அதிகரித்துள்ளது. 120 கோடி இந்தியர்களிடம் ஆதார் உள்ளது. 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துக்களை ஆப்டிக் பைபர் மூலம் இணைக்கும் பணி விரைவில் முடியும். கடந்த 2014ம் ஆண்டில் 59 பஞ்சாயத்துகளில் மட்டுமே ஆப்டிக் பைபர் வசதி இருந்தது. தற்போது 1 லட்சம் பஞ்சாயத்துக்கள் ஆப்டிக் பைபர் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்