வரி செலுத்துவோர் எண்ணிக்கை இரட்டிப்பாகும்: ஜெட்லி நம்பிக்கை
2018-10-12@ 00:25:59

புதுடெல்லி: பாஜ ஆட்சியின் 5 ஆண்டுகளில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை இரட்டிப்பாக உயரும் என அருண்ஜெட்லி தெரிவித்தார. டெல்லியில் சிஏஜி ஏற்பாடு செய்த அக்கவுன்டன்ட் ஜெனரல் மாநாட்டில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி பேசியதாவது: வரி சீர்திருத்தம், கருப்புப்பண மீட்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் வரி வசூல் ஆண்டுக்கு 15 முதல் 20 சதவீதம் அதிகரித்துவருகிறது. மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜ அரசு 2014 மே மாதம் பொறுப்பேற்றபோது, நேரடி வரி செலுத்துவோர் எண்ணிக்கை 3.8 கோடியாக இருந்தது. தொடர் நடவடிக்கைகளின் பலனாக இந்த எண்ணிக்கை 7.5 கோடி அல்லது 7.6 கோடியாக அதிகரிக்கும். அதாவது, வரி செலுத்துவோர், வருமான வரிதாக்கல் செய்வோர் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்றார்.
மேலும் செய்திகள்
சட்டம் அமலுக்கு வந்தது சீட்டுப்பணம் வசூலிக்க தனி நபர்களுக்கு தடை
கடன் பாக்கியை வசூலிக்க மல்லையா லண்டன்சொத்து கணக்கெடுக்க வங்கிகள் தீவிரம்
பிஎப் வட்டி விகிதம் திடீர் உயர்வு ... தேர்தல் வந்தாலே பாசம் பத்திக்கும்
தங்கம் விலையில் திடீர் மாற்றம் : ஒரே நாளில் சவரன் ரூ.136 குறைந்தது
ஐசிஐசிஐ முன்னாள் சிஇஓ.க்கு சிபிஐ ‘லுக் அவுட்’ நோட்டீஸ்
பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு விஆர்எஸ் திட்டம் ரெடி : இதுவரை இல்லாத அளவு தொகை கிடைக்கும்