SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதல பாதாளத்தில் வீழ்ந்த ரூபாய் மதிப்பு பங்குச்சந்தையில் ரூ3 லட்சம் கோடி போச்சு: முதலீட்டாளர்கள் தலையில் பேரிடி

2018-10-12@ 00:24:40

புதுடெல்லி: பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. பங்குகளின் மதிப்பு 3 லட்சம் கோடி ரூபாய் சரிந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்திய பங்குச்சந்தைகள் நேற்று 1000 புள்ளிகளுக்கு மேல் சரிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீடு நேற்று 1030 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 34,000க்கு கீழ் வந்து விட்டது. தேசிய பங்குச்சந்தைகள் 10,200 புள்ளிகளாக இருந்தன. பங்குச்சந்தைகள் சரிவுக்கு ரூபாய் மதிப்பு மிக முக்கிய காரணமாக அமைந்து விட்டது. நேற்று அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவாக ரூ74.45 ஆக சரிந்திருந்தது. வர்த்தக முடிவில் ரூ74.12 ஆனது. அமெரிக்க டாலருக்கு தேவை அதிகரிப்பு, வெளிநாட்டவர் முதலீடுகள் வெளியேற்றம் மற்றும் பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவு போன்றவற்றால் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளன.

டாடா ஸ்டீல், பாரத ஸ்டேட் வங்கி, இன்போசிஸ், மகிந்திரா அண்ட் மகிந்திரா, டிசிஎஸ் பங்குகள் மதிப்பு அதிகமாக மதிப்பிழந்தன. நேற்று முன்தினம் வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தை 461 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தை 159 புள்ளிகளும் அதிகரித்தது முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், நேற்று  சென்செக்ஸ் அதிகபட்சமாக 1,037.36 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் பங்குகள் மதிப்பு ரூ3,05,625.87  சரிந்து ரூ1,35,59,695.82  ஆக இருந்தது. மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட 30 பங்குகளில் 28 பங்குகளும், தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட 50 பங்குகளில் 40 பங்குகளும் சரிவடைந்தன. இதுமட்டுமின்றி, அமெரிக்க பெடரல் வங்கி வட்டி உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு, பெடரல் வங்கி குறித்து டிரம்ப் விமர்சனம்,

அமெரிக்கா - சீனா இடையே நிலவி வரும் வர்த்தகப்போர்போன்றவையும் ரூபாய் மற்றும் பங்குச்சந்தைகள் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளன. இவை சந்தையில் எதிரொலித்துள்ளது.  இந்தியாவில் முதலீடுகளை ஈர்க்க மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள், தங்கள் முதலீடுகளை தொடர்ந்து வெளியேற்றி வருகின்றனர். நேற்று முன்தினம் மற்றும் ரூ1,096 மதிப்பிலான பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விலக்கிக் கொண்டுள்ளனர். வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 759.74 புள்ளி சரிந்து 34,001.15 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி 225.45 புள்ளி சரிந்து 10,234.65 ஆகவும் இருந்தது. பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்தது முதலீட்டாளர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • canadaplastic

    கனடாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு கண்காட்சி: கடலில் வீசப்பட்ட பொருட்களை வைத்து கடல்வாழ் உயிரினங்கள் வடிவமைப்பு

  • paradechina

    சீனாவில் ஆசிய கலாச்சார திருவிழா 2019: பல நாடுகளின் நாகரிகங்களை பறைசாற்றும் வகையில் அணிவகுப்பு

  • buddhapurnima

    புத்தர் அவதரித்த தினமான புத்த பூர்ணிமா பண்டிகை உலகமெங்கும் விமர்சையாக கொண்டாடப்பட்டது: புகைபடங்கள்

  • flyingtaxi

    ஜெர்மனியில் 5 இருக்கைகள் கொண்ட பறக்கும் டாக்ஸி அறிமுகம்: சோதனை ஓட்டம் வெற்றி

  • 20-05-2019

    20-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்