SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேறு கட்சியில் இருப்பவர், அதிமுகவில் தொடர முடியாது என்பதால் சசிகலா நீக்கப்பட்டார்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

2018-10-11@ 17:52:50

சென்னை: அதிமுக பலாப்பழம் போன்றும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எட்டிக்காய் போன்றது என்றும் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் மாநிலக் கல்லூரியின் 178-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிலையில் சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த  அமைச்சர் ஜெயகுமார், கட்சி சட்டவிதிகளின்படி, வேறொரு கட்சியில் இருப்பவர், அதிமுகவில் தொடர முடியாது என்பதன் அடிப்படையிலேயே சசிகலா நீக்கப்பட்டுள்ளார் என்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளராக சசிகலா இருப்பதால், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் தகுதியை அவர் இழந்துவிட்டதாக தெரிவித்தார். அண்ணா திராவிட முன்னேற்ற கழக விதி, சசிகலா குடும்பத்தினர் அனைவருக்கும் பொருந்தும் என்றும் அதிமுக பலாப்பழம் என்றும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எட்டிக்காய் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • harry_megaa11

    இளவரசர் ஹாரி-மேகன் தம்பதியினரின் முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணம்! : கண்கவர் படங்கள்

  • TirupatiBramachavamseventh

    திருப்பதி நவராத்திரி பிரமோற்சவ 7ம் நாள் : சந்திர பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

  • morocco_accident111

    மொராக்கோ நாட்டில் ரயில் தடம்புரண்ட விபத்தில் 7 பயணிகள் பலி : 80க்கும் மேற்பட்டோர் படுகாயம்

  • 17-10-2018

    17-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • raavana_2018

    டெல்லியில் தசராவுக்கு ராவண உருவ பொம்மைகள் தயாரிப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்