SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தனியார் நிறுவனத்திடம் இருந்து அதிக விலை கொடுத்து நிலக்கரி வாங்கும் நெருக்கடி ஏன் : ஸ்டாலின் சரமாரி கேள்வி

2018-10-11@ 17:37:55

சென்னை : வெளிப்படையாக டெண்டர் விடாமல் தனியார் நிறுவனத்திடம் இருந்து அதிக விலை கொடுத்து நிலக்கரி இறக்குமதி செய்ய தமிழக அரசு முயற்சிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோல் இந்தியா நிறுவனத்திடம் இருந்து ஒரு டன் நிலக்கரி 2000 ரூபாய் என்று வாங்கும் நிலையில், அதானி உள்ளிட்ட தனியார் நிறுவனங்களிடம் அதிக விலை கொடுத்து நிலக்கரி வாங்க முயற்சிப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். டெண்டர் இல்லாமல் நிலக்கரி வாங்க தமிழ்நாடு மின்பகிர்மான கழக தலைவரும் அரசின் மின்துறை செயலாளரும் எந்த அடிப்படையில் ஒப்புக் கொண்டார்கள் என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாடு டெண்டர் சட்ட விதிகளை தளர்த்தி அதிக விலை கொடுத்து நிலக்கரியை வாங்க வேண்டிய நெருக்கடி ஏன் மின் பகிர்மானக் கழகத்திற்கு வந்தது எனவும் கேள்வி எழுப்பி இருக்கும் ஸ்டாலின் நிலக்கரி இறக்குமதி பற்றிய தெளிவான கொள்கை மின் பகிர்மானக் கழகத்திடம் இல்லை என்று சிஏஜி அறிக்கையில் முன்கூட்டியே சுட்டிக் காட்டியும் நிலக்கரி இறக்குமதிக் கொள்கையை வகுக்காமல் டெண்டர் விதிகளைத் தளர்த்துவது ஏன் என வினவியுள்ளார். காற்றாலை மின்சார ஊழல், நிலக்கரி கொள்முதல் ஊழல், மின்சார கொள்முதல் ஊழல் என்று மெகா ஊழல்களின் நரகபூமியாக மின்பகிர்மான கழகம் மாறி உள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். எனவே நிலக்கரி தேவையென்றால் வெளிப்படையான டெண்டர் மூலம் வாங்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டு கொண்டுள்ளார். 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

  • gold_navaratchri11

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

  • balore_arrrres1

    சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது

  • gasa_vanvali111

    காசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்