SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் பச்சிளம் குழந்தையை முட்புதரில் வீசிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு

2018-10-11@ 17:32:29

சென்னை : சென்னை வளசரவாக்கத்தில் முட்புதரில் இருந்து பிறந்து சில தினங்களேயான பெண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் மின்மயானம் அருகே உள்ள கடை வாசலில் நேற்று இரவு கைக்குழந்தையின் அழுகுரல் கேட்டது. கடையின் பாதுகாவலர் சுற்றுப்பகுதியில் தேடி பார்த்த போது அருகில் இருந்த முட்புதர் ஒன்றில் குழந்தை இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். தொப்புல் கொடியுடன் இருந்த அந்த பெண் குழந்தையை மீட்ட அவர் வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

இதனையடுத்து காவல்துறையினர் குழந்தையை மீட்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, ஒரு இளம்பெண்ணும், இளைஞரும் டிராவல் பேக் ஒன்றில் குழந்தையை எடுத்து வந்து ஆள்நடமாட்டதை நோட்டமிட்ட பின்னர் குழந்தையை எடுத்து முட்புதரில் வைத்துவிட்டு சென்ற காட்சிகள் பதிவாகியுள்ளது. இதுகுறித்து சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையில் வளசரவாக்கம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • harry_megaa11

    இளவரசர் ஹாரி-மேகன் தம்பதியினரின் முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணம்! : கண்கவர் படங்கள்

  • TirupatiBramachavamseventh

    திருப்பதி நவராத்திரி பிரமோற்சவ 7ம் நாள் : சந்திர பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

  • morocco_accident111

    மொராக்கோ நாட்டில் ரயில் தடம்புரண்ட விபத்தில் 7 பயணிகள் பலி : 80க்கும் மேற்பட்டோர் படுகாயம்

  • 17-10-2018

    17-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • raavana_2018

    டெல்லியில் தசராவுக்கு ராவண உருவ பொம்மைகள் தயாரிப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்