SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்காவில் வினோதம்..... டிரம்ப் மீதான எதிர்ப்பை வித்தியாசமாக வெளிப்படுத்திய வாலிபர்

2018-10-11@ 17:25:45

நியூயார்க்: நாய்கள் சிறுநீர் கழிப்பதற்காக நியூயார்க் நகரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்பின் சிலை வைக்கப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  அமெரிக்காவின் நியூயார்க் நகரில் புரூக்ளின் பகுதியில் உள்ள சாலையோர  புல் பகுதியில்தான் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. இந்த வளர்க்கப்பட்ட புல் பகுதியின் மத்தியில் சுமார் ஒரு அடி உயரத்திற்கு டிரம்பின் சிலை வடிவமைக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை பில் கேப்லே என்பவர் வடிவமைத்துள்ளார்.

நியூயார்க்கின் புரூக்ளின் நகரின் சாலையோரத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு அடி உயரமுள்ள டிரம்ப்பின் மார்பளவு சிலையின் கீழ் பகுதியில் 'என்மீது சிறுநீர் கழிக்கவும்' என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையை வடிவமைத்து வைத்த பில் கேப்லே, டிரம்ப் ஒரு அதிபராக செயல்படவில்லை என்ற கோபத்தின் வெளிப்பாடாக அந்தச் சிலையை வைத்துள்ளதாக தெரிவித்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • nheru_soniaa11

    நாட்டின் முதலாவது பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 55வது நினைவு தினம் : சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி

  • malar_modi12

    2வது முறையாக பிரதமராகும் நரேந்திர மோடி ; கட்சித் தலைவர்கள் மோடிக்கு மலர் கொத்துக்களுடன் வாழ்த்து

  • peruearthqq1

    பெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் சுமார் 8 ஆக பதிவு

  • Trump_japan11

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பான் பயணம் : ஜப்பான் பிரதமருடன் கோல்ஃப் விளையாடி அசத்தல்

  • kashmir_kola11

    தீவிரவாதி ஜாகீர் முசா கொல்லப்பட்டதன் எதிரொலி : காஷ்மீரில் வன்முறை வெடிப்பு; ஊரடங்கு உத்தரவு அமல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்