உங்களது தாய்மொழியிலேயே பேசுங்கள், தாய்மொழியை பரப்புங்கள்: வெங்கைய நாயுடு அறிவுறுத்தல்
2018-10-11@ 17:22:39

சென்னை: உங்களது தாய்மொழியிலேயே பேசுங்கள், தாய்மொழியை பரப்புங்கள் வீட்டில் பிற மொழிகளில் பேச வேண்டாம் எனக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு அறிவுறுத்தியுள்ளார். சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் மாநிலக் கல்லூரியின் 178-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, மாணவர்களுக்குப் பட்டங்களையும் பதக்கங்களையும் வழங்கினார். அதன் பின்னர் பேசிய அவர், மாணவர்கள் தாய்மொழியில் கற்கவும் பேசவும் வேண்டும் எனத் தெரிவித்தார். பாரம்பரிய உணவுப்பழக்கத்தையே பின்பற்ற வேண்டும் என்றும், அதுவே உடல்நலத்துக்கு நல்லது என்றும் தெரிவித்தார்.
மாணவர்கள் உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டும் என்றும், பாரம்பரிய உடைகளை அணிய வேண்டும் என்றும் கூறினார். விளையாட்டு, நாட்டுநலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை ஆகியவற்றில் இணைந்து செயல்படுபவர்களுக்கு மட்டும் தான் பட்டம் வழங்கப்படும் என்கிற நிலையை உருவாக்க வேண்டும் அவர் தெரிவித்தார். கோவில்களில் சில சாதியினரை அனுமதிக்காத போக்கு உள்ளதாகவும், இந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்றும் வெங்கைய நாயுடு தெரிவித்தார்.
மேலும் சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியின் பவளவிழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, எத்திராஜ் கல்லூரியின் நிர்வாக கட்டிடம் மற்றும் ஒருங்கிணைந்த விளையாட்டு பயிற்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டினார். விழாவில் பேசிய வெங்கைய நாயுடு, பெண்கள் தேசத்தை கட்டமைக்க வேண்டும் என்று தெரிவித்தார். வேலை வாய்ப்புக்கு மட்டும் கல்வி கற்பிக்க கூடாது என்றும் அறிவாற்றல், சிந்தனை, செயல்திறன், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்திலும் நம்மை முன்னேற்றுவதுதான் கல்வி என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
வீட்டுவசதி வாரிய ஒதுக்கீடுதாரர்களுக்கு அரசு வட்டி தள்ளுபடி சலுகை மேலும் ஓராண்டு நீட்டிப்பு : தமிழக அரசு அறிக்கை
கூடுதல் ஆணையர் திருமகள் மீது நடவடிக்கை கோரி வழக்கு அறநிலையத்துறை ஆணையர் நேரில் ஆஜராக வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு
5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தக்கூடாது : வைகோ அறிக்கை
ஆவடி-அரக்கோணம் இடையே மின்சார ரயில் ரத்து
இதுதாண்டா போலீஸ், அருந்ததி படங்களை இயக்கியவர் தெலுங்கு சினிமா இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா மரணம்
துறைமுக இணைப்பு சாலை பணிக்காக பழைய மீன் ஏலக்கூடத்தை இடிக்க அதிகாரிகள் முடிவு
23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!
சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை
திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா
சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்