SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் 5ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கப்படும் : தொல்லியல் துறை அறிக்கை தாக்கல்

2018-10-11@ 17:22:28

மதுரை : மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் 5ம் கட்ட அகழ்வாராய்ச்சி  பணிகள் தொடங்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொல்லியல் துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழ்வாராய்ச்சி பணிகள் தொடர்ந்து  நடைபெற வேண்டும் என வழக்கறிஞர்  கனிமொழி மதி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.இதனிடையே, ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தொல்லியல் துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கீழடியில் நடந்த 4ம் கட்ட ஆய்வில் தங்கம் உள்ளிட்ட 7000 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பொருட்கள் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பதை கண்டறிவதற்காக அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவிற்கு அனுப்பி வைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதையடுத்து கீழடி அகழாய்வில் 4-ம் கட்ட ஆய்வு பணியில் 6 தங்க ஆபரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது என்றும் இந்த ஆபரணங்களின் மதிப்பு மற்றும் வயது குறித்து ஆய்வு செய்ய கனடாவில் உள்ள பீட்டா ஆய்வு மையத்துக்கு அனுப்ப உள்ளோம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் 5ம் கட்ட அகழ்வாராய்ச்சி  பணிகள் தொடங்கப்படும் என தொல்லித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விவரங்களை கேட்டறிந்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை 31ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • canada_cannabiss

    100 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த தடையை நீக்கி, கஞ்சா பயன்பாட்டை சட்டபூர்வமாகயது கனடா

  • harry_megaa11

    இளவரசர் ஹாரி-மேகன் தம்பதியினரின் முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணம்! : கண்கவர் படங்கள்

  • TirupatiBramachavamseventh

    திருப்பதி நவராத்திரி பிரமோற்சவ 7ம் நாள் : சந்திர பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

  • morocco_accident111

    மொராக்கோ நாட்டில் ரயில் தடம்புரண்ட விபத்தில் 7 பயணிகள் பலி : 80க்கும் மேற்பட்டோர் படுகாயம்

  • 17-10-2018

    17-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்