SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புயல் சின்னம் காரணமாக வடகிழக்கு பருவமழை அறிகுறி இல்லை: அக்.15-க்கு பிறகு வாயப்பு...வானிலை ஆய்வு மையம்

2018-10-11@ 17:06:15

சென்னை: அக்டோபர் 15-ம் தேதிக்கு பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வடகிழக்கு பருவமழை குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட  அறிக்கையில் அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் காணப்பட்டன. எனவே, அக்டோபர் 8-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என  எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அரபிக்கடலிலும் வங்கக்கடலிலும் புயல் சின்னம் உருவானதால் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் காணப்படவில்லை என்றும் அக்டோபர் 15-ம் தேதிக்கு பிறகு வடகிழக்கு  பருவமழை தொடங்க வாயப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த வாரம் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்தது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது என்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுவையின்  ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. தலைநகர் சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • perufloodrain

    பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • himachal

    இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்

  • navamkolumpu

    கொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்

  • araliparaijallikattu

    அனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்!

  • dakkafire

    வங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து : 69 பேர் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்