SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜெயலலிதா பயன்படுத்திய ஹெலிகாப்டரை விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு

2018-10-11@ 17:05:39

சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பயணத்துக்காக கடந்த 2006ம் ஆண்டு பெல் 412 இ.பி. என்ற வகையைச் சேர்ந்த நவீன ஹெலிகாப்டர் ஒன்று வாங்கப்பட்டது. 2 என்ஜின்கள் இந்த ஹெலிகாப்டரில் 11 பேர் பயணம் செய்ய முடியும். ஜெயலலிதா முதல்வராக இருந்த கால கட்டங்களில் பல தடவை அந்த ஹெலிகாப்டரை அவர் பயன்படுத்தி உள்ளார். அவர் மரணத்துக்கு பிறகும் அந்த ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டு வந்தது. கடைசியாக அந்த ஹெலிகாப்டர் கடந்த மார்ச் மாதம் வரை பயன்படுத்தப்பட்டது. பின்னர் பழுது அடைந்ததால் அதன் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டு விட்டன.  

தற்போது அந்த ஹெலிகாப்டர் சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த ஹெலிகாப்டரை பழுது பார்த்து பயன்படுத்துவதற்கு அதிக செலவாகும் என்பதால் அந்த ஹெலிகாப்டரை விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும்படி மாநில வணிக நிறுவனத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து அந்த ஹெலிகாப்டரை விற்பதற்கு சர்வதேச அளவில் டெண்டர் கோரப்பட்டுள்ளதால், விரைவில் விற்பனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹெலிகாப்டரை விற்பதற்கு தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் சென்னை விமான நிலையத்துக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • christree_world

    உலகம் முழுவதிலும் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள கண்ணைக்கவரும் கிறிஸ்துமஸ் மரங்களின் புகைப்படங்கள்!

  • army_girlschn

    சென்னை ராணுவப் பயிற்சி மையத்தில் ஆப்கானிஸ்தான் பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி!

  • loyola_studnt

    சர்வதேச குடியேறுபவர்களின் நாளை முன்னிட்டு சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் பேரணி

  • military_airballon

    ராட்சத பலூனில் ராணுவ வீரர்கள் சாகசப் பயணம்: காஞ்சிபுரத்தில் கண்டுகளித்த பொதுமக்கள்!

  • pongal_potpaint

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானைகளுக்கு வண்ணம் தீட்டும் பணிகள் தீவிரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்