SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரூ5 லட்சம் வாங்கி கைதான அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா சஸ்பெண்ட் : தமிழக அரசு நடவடிக்கை

2018-10-11@ 02:35:07

சென்னை: ரூ5 லட்சம் வாங்கியதாக கைதான அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள பழைய உற்சவர் சோமாஸ்கந்தர் சிலையை மாற்றி, புதிதாக உற்சவர் சிலை செய்ய இந்து அறநிலையத்துறை திட்டமிட்டது. அதன்படி, இந்து  அறநிலையத்துறை ஆணையர் உத்தரவின்பேரில், சிற்ப சாஸ்திரத்தின்படி சோமாஸ்கந்தர் சிலை 50 கிலோ எடையிலும், சிவகாமி சிலை 65 கிலோ எடையிலும் செய்ய முடிவெடுக்கப்பட்டது. இதற்காக பக்தர்களிடம் இருந்து பெறப்பட்ட தங்கத்தில் முறைகேடு நடைபெற்று இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, சிலைகடத்தல் தடுப்பு பிரிவு வழக்கு பதிவு விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் சிலை  செய்ததில் 5.75 கிலோ அளவுக்கு தங்கம் பயன்படுத்தாமல் முறைகேடு நடைபெற்று இருப்பது தெரியவந்தது. அதன்பேரில், தலைமை ஸ்தபதி முத்தையா, கோயில் செயல் அலுவலர் முருகேசன், ஸ்தானிகர் ராஜப்பா மற்றும் செந்தில், கிருஷ்ணமூர்த்தி,  சங்கரன், பரத்குமார், வினோத்குமார்,

சுவாமிமலை மாசிலாமணி ஸ்தபதி ஆகிய 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக முத்தையா ஸ்தபதி கைது செய்யப்பட்டார். 6 பேர் முன் ஜாமீன் பெற்றனர். இந்த வழக்கில், போலீசார் நடத்திய விசாரணையில், இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் (திருப்பணி) கவிதா, ரூ5 லட்சம் லஞ்சம் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, மயிலாப்பூரில் உள்ள கவிதாவின்  வீட்டுக்கு சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீசார் சென்று அவரை கைது செய்தனர். பின்னர், அவரை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் திருச்சி சிறையில் அடைத்தனர். பின்னர், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்படவில்லை. மாறாக, அவர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவரது பொறுப்பு கூடுதல் ஆணையர் திருமகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையே உயர் நீதிமன்றத்தில் கவிதாவை சஸ்பெண்ட் செய்யக்கோரி வழக்கு  தொடரப்பட்டது. அந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.  

இந்த நிலையில், தற்போது கவிதாவை சஸ்பெண்ட் செய்து கூடுதல் முதன்மை செயலாளர் வெங்கடேசன் உத்தரவிட்டுள்ளார். அதில், கடந்த ஜூலை 31ம் தேதி கூடுதல் ஆணையர் கவிதாவிடம் கிரிமினல் வழக்கு தொடர்பாக 48 மணி நேரம் காவலில் வைக்கப்பட்டார். அவர் மீதான வழக்கு விசாரணை நடந்து வருகிறது. 17 இ விதிப்படி அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதால் தற்ேபாது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்ட காலத்தில் உரிய அனுமதி பெறமால் வெளியில் செல்லக்கூடாது. அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதால், இக்காலகட்டத்தில் அவருக்கு அலவன்ஸ் பிடித்தம் செய்யப்படுகிறது’ என்று அதில் கூறப்பட்டுள்ளது. கவிதா பணியிட மாற்றம் செய்யப்பட்ட காலத்தில் உரிய அனுமதி பெறமால் வெளியில் செல்லக்கூடாது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • CivilAviationJetAirways

  மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்

 • RajivAnniversary28

  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்!

 • ICRA2019

  கனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்

 • ChongqingCycleRace

  சீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

 • BrazilBarMassacre

  பிரேசில் மதுபான விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..: 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியான பரிதாபம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்