SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரசவ பாதிப்பால் 18 ஆண்டுகளாக கோமாவில் உள்ள பெண்ணுக்கு மாதம் ரூ5,000 நிதி: கலெக்டர் நடவடிக்கை எடுக்க உத்தரவு

2018-10-11@ 00:47:08

மதுரை: பிரசவ பாதிப்பால் 18 ஆண்டுகளாக கோமாவிலுள்ள பெண்ணுக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. குமரி மாவட்டம், பொன்மனை அருகே இடைக்கட்டான்களை பகுதியை சேர்ந்தவர் ஆதர்ஷா (18). இவர், ஐகோர்ட் மதுரை கிளை நிர்வாக நீதிபதி எம்.எம்.சுந்தரேஷூக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘‘என் தாய் ஷோபா கடந்த 2000ம் ஆண்டு குலசேகரத்தில் உள்ள கூட்டுறவு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்ந்தார். அங்கு அறுவை சிகிச்சை மூலம் நான் பிறந்தேன். அப்போது எனது தாய்க்கு மயக்கமருந்து கொடுக்கப்பட்டதில் பிரச்னை ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்றவர் இன்னும் குணமடையவில்லை. என் தந்தை விவாகரத்து பெற்று வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். எனவே தவறான சிகிச்சைக்கு உரிய இழப்பீடு வழங்கவும், தாய்க்கு தேவையான சிகிச்சை வழங்கவும், எனது கல்விச்செலவுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்று கூறியிருந்தார். இதன் அடிப்படையில் ஐகோர்ட் மதுரை கிளை பதிவாளர் (நீதி) தரப்பில், தாமாக முன் வந்து பொதுநல மனுவாக தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள், ஆசாரிபள்ளம் அரசு தலைமை மருத்துவமனை டீன் தலைமையிலான மருத்துவ வல்லுநர் குழுவினர் அந்த பெண்ணுக்கு  சிகிச்சை அளித்தால் குணப்படுத்த முடியுமா என்பது குறித்து பரிசோதித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர். இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஷோபாவிற்கு தொடர் சிகிச்சை அளித்தாலும் பலன் கிடைக்காது. அவர் மீண்டு வர வாய்ப்பில்லை என கூறப்பட்டிருந்தது. இதையடுத்து நீதிபதிகள், கோமாவிலுள்ள பெண்ணின் இறுதி வாழ்நாள் வரையில் மாற்றுத்திறனாளிக்குரிய திட்டத்தின் அடிப்படையில் மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் நிதியுதவி வழங்க கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 16-06-2019

  16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 15-06-2019

  15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • china

  சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

 • oaman_thee11

  மர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்

 • AftermathProtestHK

  ஹாங்காங்கில் அரங்கேறும் தொடர் போராட்டங்களால் அலங்கோலமாகும் நகரும்..: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்