SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

என்எல்சியுடன் கைகோர்க்கும் இந்திய நிலக்கரி நிறுவனம்: 5,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடிவு

2018-10-11@ 00:39:51

நெய்வேலி: என்எல்சி நிறுவனத்துடன், இந்திய நிலக்கரி நிறுவனம் இணைந்து 5 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா  நிறுவனம் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய நிலக்கரி நிறுவனத்துடன் இணைந்து   3 ஆயிரம்  மெகாவாட் சூரிய ஒளி மின் திட்டங்களையும், 2 ஆயிரம் மெகாவாட் அனல்மின் திட்டங்களையும்,  அமைக்க  கொல்கத்தாவில் புரிந்துணர்வு  ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதில்  மகா ரத்னா தகுதி பெற்ற இந்திய நிலக்கரி  நிறுவனத்துக்கும் அதன் துணை நிறுவனங்களுக்கும் தேவையான  அனைத்து மின் சக்தியும் பசுமை ஆற்றல் எனப்படும் சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின் நிலையங்களில்  பெறும் வகையில் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டங்களை செயல்படுத்துவதற்காக நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் என்எல்சி நிறுவனத்துடன் இணைந்து 50: 50  சதவீத  முதலீட்டில் ஒரு கூட்டு நிறுவனத்தை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  இதில் என்.எல்.சி  நிறுவனம் தனது 62வது ஆண்டுகால பணியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 4240 மெகாவாட் திறன் கொண்ட பழுப்பு நிலக்கரி மற்றும் நிலக்கரியில் செயல்படும்  அனல்மின் இயக்கி வருகிறது.  இந்நிலையில் கொல்கத்தா நகரில் இந்திய நிலக்கரி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் இத்திட்டங்களை  செயல்படுத்துவதற்காக ஒரு கூட்டு நிறுவனத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.  என்.எல்.சி  நிறுவன தலைவர்  ராகேஷ்குமார் மற்றும் இந்திய நிலக்கரி நிறுவன தலைவர்  அனில்குமார்  ஜா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் என்எல்சி  இயக்குநர் நாதெள்ள  நாகமகேஷ்வர் ராவ்  மற்றும் இந்திய நிலக்கரி நிறுவன தொழில்நுட்ப துறை இயக்குனர் பினய் தயாள்  ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • christree_world

    உலகம் முழுவதிலும் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள கண்ணைக்கவரும் கிறிஸ்துமஸ் மரங்களின் புகைப்படங்கள்!

  • army_girlschn

    சென்னை ராணுவப் பயிற்சி மையத்தில் ஆப்கானிஸ்தான் பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி!

  • loyola_studnt

    சர்வதேச குடியேறுபவர்களின் நாளை முன்னிட்டு சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் பேரணி

  • military_airballon

    ராட்சத பலூனில் ராணுவ வீரர்கள் சாகசப் பயணம்: காஞ்சிபுரத்தில் கண்டுகளித்த பொதுமக்கள்!

  • pongal_potpaint

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானைகளுக்கு வண்ணம் தீட்டும் பணிகள் தீவிரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்