SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சில்லி பாயின்ட்...

2018-10-11@ 00:06:54

* வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நடக்க உள்ள ஒருநாள் தொடருக்கான இந்திய அணி தேர்வு இன்று நடைபெறுகிறது.
* ஐசிசி டி20 உலக கோப்பை தொடருக்கான ஆசிய தகுதிச் சுற்றில் மியான்மர் - மலேசியா அணிகள் நேற்று மோதின. டாசில் வென்ற மலேசியா முதலில் பந்துவீச, மியான்மர் அணி 11 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 9 ரன் எடுத்து (முதல் 3 பேட்ஸ்மேன் டக் அவுட்) திணறிய நிலையில், மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது (பவன்தீப் சிங் 1 ரன்னுக்கு 5 விக்கெட்). இதைத் தொடர்ந்து டி/எல் விதிப்படி 8 ஓவரில் 6 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மலேசியா, தொடக்க வீரர்கள் டக் அவுட்டானாலும் 10 பந்தில் வெற்றியை வசப்படுத்தியது.
* பாலியல் வன்முறைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் ‘மி டூ’ ட்விட்டர் பக்கம் வைரலாகி வரும் நிலையில், நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரர்களுக்கு வழங்கப்படும் கையேட்டில் பெண்களின் ஒப்புதல் இல்லாமல் உறவு கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தும் புதிய விதிமுறை சேர்க்கப்பட்டுள்ளது.
* பிரையன் லாரா அணியில் இருந்தபோது கூட இந்தியாவில் எங்களால் வெற்றி பெற முடியவில்லை என்று தங்கள் அணி மீதான விமர்சனத்துக்கு வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர் பதில் அளித்துள்ளார்.
* ஜமைக்கா தடகள நட்சத்திரம் உசேன் போல்ட், தனது கால்பந்து வாழ்க்கையை சிட்னியில் நாளை தொடங்குகிறார். சவுத் வெஸ்ட் யுனைட்டட் அணியுடன் நடைபெற உள்ள காட்சிப் போட்டியில் அவர் சென்ட்ரல் கோஸ்ட் மரைன்ஸ் அணிக்காக களமிறங்க உள்ளார்.
* புவனேஸ்வரில் நடைபெற உள்ள உலக கோப்பை ஹாக்கி போட்டித் தொடரில் (நவ. 28 - அக். 16) இந்திய அணி அனுபவ வீரர்
எஸ்.வி.சுனில் காயம் காரணமாக விளையாட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.
* ஆசிய பாராலிம்பிக் தொடரின் ஆண்கள் வில்வித்தை தனிநபர் ரீகர்வ் பிரிவில் இந்திய வீரர் ஹர்விந்தர் சிங் தங்கப் பதக்கம் வென்றார்.
* டோக்கியோவில் நடைபெற உள்ள 2020 ஒலிம்பிக்சில் அகதிகள் அணி பங்கேற்க உள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-06-2019

  19-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • bji

  முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

 • suvami

  திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா

 • mango

  கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு

 • earth

  சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்