SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆஸ்திரேலியாவுக்கு 462 ரன் இலக்கு

2018-10-11@ 00:06:52

துபாய்: பாகிஸ்தான் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணிக்கு 462 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 482 ரன்குவித்தது (இமாம் உல் ஹக் 76, முகமது ஹபீஸ் 126, ஷபிக் 80, ஹரிஸ் சோகைல் 110 ரன்). ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 202 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (3 பேர் டக் அவுட்). அறிமுக வீரர் பிஞ்ச் 62 ரன், உஸ்மான் கவாஜா 85 ரன் விளாச, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். பாகிஸ்தானின் அறிமுக ஸ்பின்னர் பிலால் ஆசிப் 6 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். முகமது அப்பாஸ் 4 விக்கெட் வீழ்த்தினார்.

பாலோ ஆன் தராமால் 280 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான், 3ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 45 ரன் எடுத்திருந்தது.  நேற்று அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 181 ரன் என்ற ஸ்கோருடன் ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தது. ஆஸி. பந்துவீச்சில் ஹாலண்ட் 3, நாதன் லயன் 2, லாபஸ்சேன் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 462 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சை தொடங்கியது. பிஞ்ச் - கவாஜா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 29.3 ஓவரில் 87 ரன் சேர்த்து வலுவான தொடக்கத்தை கொடுத்தது. பிஞ்ச் 49 ரன் (99 பந்து, 5 பவுண்டரி) எடுத்து முகமது அப்பாஸ் பந்துவீச்சில் பெவிலியன் திரும்ப, அடுத்து வந்த ஷான் மார்ஷ், மிட்செல் மார்ஷ் இருவரும் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர்.

 விக்கெட் இழப்பின்றி 87 ரன் என்ற நிலையில் இருந்து, 87 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து ஆஸி. அணி திடீர் சரிவை சந்தித்தது. மூன்று விக்கெட்டையும் அப்பாஸ் கைப்பற்றி அசத்தினார். இந்த நிலையில், கவாஜா - டிராவிஸ் ஹெட் ஜோடி 4வது விக்கெட்டுக்கு உறுதியுடன் போராடி ரன் சேர்த்தது. 4ம் நாள் ஆட்ட முடிவில் ஆஸி. அணி 3 விக்கெட் இழப்புக்கு 136 ரன் எடுத்துள்ளது. கவாஜா 50 ரன், ஹெட் 34 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.
கை வசம் 7 விக்கெட் இருக்க, ஆஸி. வெற்றிக்கு இன்னும் 326 ரன் தேவை என்ற பரபரப்பான நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-12-2018

    16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lisbon_tramp11

    லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்