SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பா.ஜனதா முன்னாள் கவுன்சிலர் வெடிகுண்டு வீசி கொலை

2013-03-20@ 00:21:10

பரமக்குடி : பரமக்குடியில் நகராட்சி பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் பட்டப்பகலில் வெடி குண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட் டம் பரமக்குடி அம்மன் சன்னதி தெருவைச் சேர்ந்தவர் தேங்காய் கடை முருகன்(45). கடந்தமுறை பாஜ கட்சி சார்பில் போட்டியிட்டு நகராட்சி கவுன்சிலராக இருந்தார்.

இந்நிலையில் நேற்று பகல் 2 மணியளவில் அவரது வீடு அருகே உள்ள பெட்டிக்கடையில் அமர்ந்து இருந்தார். அப்போது பைக்கில் அங்கு வந்த 3 பேர் முருகனிடம் தகராறில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் திடீரென முருகன் மீது அவர்கள் மூன்று பைப் வெடிகுண்டுகளை வீசினர். இதில் ஒன்று வெடித்துச்சிதறியது. எனினும் முருகன் அதிலிருந்து உயிர் பிழைத்தார்.

இதையடுத்து முருகனை, 3 பேரும் அரிவாளால் வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே முருகன் இறந்தார். வெடிகுண்டு சத்தம் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள், கொலையாளிகளை பிடிக்க முயன்றனர். ஆனால் கொலையாளிகள் பைக்கில் தப்பி ஓடிவிட்டனர். தகவலறிந்த ஏஎஸ்பி விக்ரம் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.  

குற்றவாளிகளை உடனே கைது செய்யவும், கொலைக்கான காரணத்தை கண்டறியவும் வலியுறுத்தி பொதுமக்கள் மாலை 4 மணியளவில் பரமக்குடி,ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர். பட்டப்பகலில் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரமக்குடியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.  அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

why do husbands have affairs link wife affair
my wife emotionally cheated on me mazsoft.com my boyfriend cheated on me with a guy
rite aid load to card coupons centaurico.com rite aid store products
cialis coupon codes coupons for cialis printable coupons for prescription medications
cialis coupon 2015 cialis discount coupon cialis free coupon


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • guiness_sathana

  எவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகள் ... வியக்க வைத்த சாதனையாளர்கள்..!

 • mexico_isai111

  இராணுவ அணிவகுப்பு, வாண வேடிக்கையுடன் கூடிய இசை, நடன நிகழ்ச்சிகள்!.. : மெக்ஸிக்கோவில் சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம்

 • 17-09-2019

  17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • dragan_canadaa

  கனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்

 • gurgaun_cameraa1

  குர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்