SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழக மீனவர்கள் தான் எல்லை தாண்டி இலங்கை கடற்பகுதிக்குள் மீன்பிடிக்க செல்வதாக அறிக்கை தாக்கல்

2018-10-10@ 11:17:32

சென்னை : தமிழக மீனவர்கள் தான் எல்லை தாண்டி இலங்கை கடற்பகுதிக்குள்  மீன்பிடிக்க செல்வதாக இந்திய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. இலங்கை  கடற்படையினரின் அத்துமீறல் பற்றி சர்வதேச நீதிமன்றத்தை அணுக மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி மீனவர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் பீட்டர் ராயன் சென்னை உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், ஆஷா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, இந்திய கடலோர காவல்படை டிஐஜி டோனி மைக்கேல் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில் இலங்கை கடற்படையினர் இந்திய எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் தமிழக மீனவர்கள் தான் எல்லை தாண்டி இலங்கை கடற்பகுதிக்குள்  மீன்பிடிக்க செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவில் மீனவர்கள் எல்லை தாண்டுவதை தடுக்க முடியவில்லை என்றும் மீனவர்களின் படகுகள் இருப்பிடத்தை அறிந்து கொள்ள இஸ்ரோ கண்டுபிடித்த  ட்ரான்ஸ்பாண்டர்கள் 786  மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வழக்கு தொடர்பாக ஆஜராகி இருந்த இஸ்ரோ அதிகாரிகள், ட்ரான்ஸ்பாண்டர்களின் செயல்பாடுகள், அதனை கண்காணிப்பது குறித்து விளக்கினர். அப்போது மீனவர்களுக்கு வழங்கப்படும்  ட்ரான்ஸ்பாண்டர்களின் விலை ரூ. 40,000 என்றும் கூறினர். இதனிடையே மீனவர்கள் இருப்பிடத்தை அறிய உதவும் ட்ரான்ஸ்பாண்டர்களை மானிய விலையில் வழங்குவது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை 12ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kedarnath

    கேதர்நாத் பகுதியில் யாத்திரை மேற்கொள்ள ஏற்பாடுகள் மும்மரம்: பனிபடர்ந்த பகுதிகளை அகற்றும் பேரழிவு நிவாரணப் படை

  • JadeMineMyanmar

    மியான்மரில் உள்ள மரகதக் கல் வெட்டி எடுக்கும் சுரங்க பகுதியில் பயங்கர நிலச்சரிவு...50க்கும் மேற்பட்டோர் பலி!

  • protestsdan

    மக்களாட்சி கொண்டு வர வலியுறுத்தி சூடானில் தொடர் போராட்டம் : அமைதியற்ற சூழல் நீடிப்பதால் மக்கள் பாதிப்பு

  • sachinbday

    46வது பிறந்தநாளை கொண்டாடும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வீடு முன்பு குவிந்த ரசிகர்கள்

  • fingersgirl

    அமெரிக்காவில் கையெழுத்துப் போட்டியில் வென்ற விரல்கள் இல்லாத சிறுமி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்