SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

3 ஆண்டுக்குப்பின் மும்பையில் பிடிபட்ட கூலிப்படை தலைவன் மோகன்ராம் கூட்டாளி திண்டுக்கல்லில் கைது: 3 துப்பாக்கிகள், 56 ேதாட்டாக்கள் பறிமுதல்

2018-10-10@ 00:47:02

திண்டுக்கல்: மும்பையில் சிக்கிய பிரபல ரவுடி மோகன்ராம் கூட்டாளியை திண்டுக்கல்லில் போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடமிருந்து 3 துப்பாக்கிகள், 56 தோட்டாக்கள்  பறிமுதல் செய்யப்பட்டன. திண்டுக்கல் தெற்கு போலீஸ் எஸ்ஐ வெற்றிச்செல்வி தலைமையிலான போலீசார், நேற்று பாரதிபுரம் வரதராஜா பள்ளி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக  நின்ற ஒருவரை விசாரித்ததில், அவர் இதே பகுதியை சேர்ந்த கணேசன் (எ) நரைமுடி கணேசன்(40) என்பது தெரியவந்தது. திடீரென அவர் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, எஸ்ஐயை  சுட்டு விடுவதாக மிரட்டினார். உடனே போலீசார் சுதாரித்து, துப்பாக்கியை பறித்து அவரை மடக்கி பிடித்தனர். பின்னர் போலீஸ் ஸ்டேஷன் கொண்டு வந்து விசாரித்ததில், 30க்கும் மேற்பட்ட கொலை வழக்குகளில் தேடப்பட்டு  மும்பையில் கைது செய்யப்பட்ட திண்டுக்கல்லை சேர்ந்த பிரபல ரவுடி மோகன்ராம் கூட்டாளி என்பது தெரிந்தது. இவர் மீது திண்டுக்கல் தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் வழிப்பறி, ஆள்கடத்தல்  உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ெதாடர்ந்து போலீசார், பாரதிபுரத்தில் உள்ள கணேசன் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தியதில் அரசு உரிமம் இல்லாத ஒரு பிஸ்டல், ஒரு ஏர் பிஸ்டல் மற்றும் 56 தோட்டாக்கள்  கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கிடையே கணேசன் நேற்று முன்தினம் மாலை நாகல்நகரில் உள்ள டாஸ்மாக் கடையில் பணிபுரிந்து வரும் திண்டுக்கல் கிழக்கு மரியநாதபுரத்தை சேர்ந்த சுரேசிடம், மாதம் ₹25 ஆயிரம்  மாமூலாக கொடுக்க வேண்டும் எனக்கூறி அவரிடம் இருந்த ₹2 ஆயிரத்தை  பறித்துள்ளார். இதுகுறித்து சுரேஷ் திண்டுக்கல் தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் 2  வழக்குகளில் கணேசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • LuklaAirportNepal

    சிறிது கவனம் சிதறினாலும் 2,000 அடி பள்ளத்தில் விழ நேரிடும் உலகின் அபாயகரமான நேபால விமான நிலையம்!

  • ParliamentAttaCK17

    நாடாளுமன்றத் தாக்குதலின் 17ம் ஆண்டு நினைவு நாள்: வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தலைவர்கள் அஞ்சலி

  • effiltowergunfire

    ஈஃபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டு ஸ்ரார்ஸ்பேர்க் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

  • FirstSnowFallShimla

    குளிர்காலத்தின் முதல் பனிப்பொழிவை பெற்றுள்ள சிம்லா நகரம்...: இயற்கையின் மகிமையை பறைசாற்றும் புகைப்படங்கள்

  • natioanalmemeoryday

    நாஞ்சிங் படுகொலையில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் வகையில் சீனாவில் தேசிய நினைவு தினம் அனுசரிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்