SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழில் தேர்வு எழுத அனுமதி கோரி நெல்லை பல்கலை முற்றுகை மாணவர்கள் மீது தடியடி நடத்திய போலீஸ்: 2 மாணவி உட்பட 10 பேர் காயம்

2018-10-10@ 00:43:55

நெல்லை: தமிழில் தேர்வு எழுத அனுமதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி உள்ளே நுழைய முயன்ற மாணவர்களை  போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதில் மாணவிகள் உட்பட 10 பேர் காயமடைந்தனர். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி, பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்கள்  செமஸ்டர் தேர்வையும் கட்டாயம் ஆங்கிலத்திலேயே எழுத வேண்டும். வருகைப் பதிவு குறைந்த மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திற்கும் ₹500 அபராதம் செலுத்த வேண்டும் என  பல்கலைக்கழகம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதற்கு பல்கலைக்கழக பேராசிரியர்களின் மூட்டா சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் எதிர்ப்பு தெரிவிக்கவே ₹500 அபராதத்தை ₹200 ஆக குறைத்தது. எனினும் ஒவ்வொரு  பாடத்திற்கும் ₹200 அபராதம் என்பதை ரத்து செய்து, அனைத்து பாடங்களுக்கும் சேர்த்து ₹500 மட்டுமே அபராதம் வசூலிக்க வேண்டும். ஆங்கில வழியில் படித்தாலும் தமிழிலும் தேர்வு எழுத  அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பல்கலைக்கழகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.இதற்காக நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் பஸ் மற்றும் வேன்களில், இந்திய மாணவர் சங்க மாநில பொதுச் செயலாளர் மாரியப்பன்  தலைமையில் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டனர்.

பகல் 11 மணியில் இருந்து பிற்பகல் 2 மணியை கடந்தும் போராட்டம் நீடித்தது. இதனையடுத்து முக்கிய பிரதிநிதிகளை மட்டும் பேச்சுவார்த்தைக்காக பல்கலைக்கழகத்திற்குள் போலீசார்  அனுமதித்தனர். பேச்சுவார்த்தை முடிந்து அவர்கள் பல்கலைக்கழக முன் வாயில் பக்கம் வந்த போது, சாலையில் நின்ற சுமார் 500 மாணவ, மாணவிகள் பல்கலைக்கழக வளாகத்திற்குள்  போலீசாரின் தடுப்பை மீறி செல்ல முற்பட்டனர்.  பலர் ஏறி குதித்து புகுந்தனர். அப்போது போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தவே, மாணவர்களும், மாணவிகளும் படுகாயத்துடன் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் அப்பகுதி போர்க்களம் போல் காணப்பட்டது. நெல்லை -தென்காசி சாலையில் வாகன போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. பின்னர் பல்கலைக்கழக வளாகத்தில் புகுந்த மாணவர்களையும், நிர்வாகிகளையும் போலீசார் பிடித்து  வாகனங்களில் ஏற்றினர். இந்த சம்பவத்தில் 2 மாணவிகள் மற்றும் ஒரு போலீஸ்காரர் உள்ளிட்ட 10 பேர் படுகாயம் அடைந்தனர். சம்பவம் தொடர்பாக நிர்வாகிகள் உள்ளிட்ட 5 பேரை  பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-02-2019

    17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

  • TitanicReplicaChina

    முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்