சிலை கடத்தல் வழக்கில் தொழிலதிபர் ரன்வீர்ஷா முன்ஜாமீன் கோரி மனு
2018-10-10@ 00:36:01

பழங்கால பொருட்கள் மீதான ஆர்வத்தால் அவற்றை சேகரித்தேன். தீனதயாளன் வீட்டில் கைப்பற்றப்பட்ட சிலைகளுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே, முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய சிலை கடத்தல் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ரன்வீர் ஷா சார்பில் மூத்த வக்கீல் எஸ்.அசோக்குமார் ஆஜராகி, கடந்த 1993 முதல் இந்த சிலைகளை பல்வேறு ஆர்ட் கேலரிகளிலிருந்து விலைக்கு வாங்கியுள்ளோம். அதற்கான சான்றுகள் எங்களிடம் உள்ளது என்றார். இதைக்கேட்ட நீதிபதி, அது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யுங்கள், என்றார். அதற்கு ரன்வீர் ஷா வக்கீல், 2008ல் தொல்லியல்துறையிடம் சான்றிதழ் பெற்றதாக தெரிவித்தார். அப்போது இதே வழக்கில் தொடர்புடைய கிரண் ராவ் சார்பில் மூத்த வக்கீல் சண்முகசுந்தரம் ஆஜராகி, நாங்களும் சிலைகளை விலை கொடுத்துதான் வாங்கினோம் என்றார். இதை கேட்ட நீதிபதி, 2 மனுதாரர்களும் நாளை மறுநாள் சிலைகள் வாங்கியது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார்.
மேலும் செய்திகள்
வீட்டுவசதி வாரிய ஒதுக்கீடுதாரர்களுக்கு அரசு வட்டி தள்ளுபடி சலுகை மேலும் ஓராண்டு நீட்டிப்பு : தமிழக அரசு அறிக்கை
கூடுதல் ஆணையர் திருமகள் மீது நடவடிக்கை கோரி வழக்கு அறநிலையத்துறை ஆணையர் நேரில் ஆஜராக வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு
5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தக்கூடாது : வைகோ அறிக்கை
ஆவடி-அரக்கோணம் இடையே மின்சார ரயில் ரத்து
இதுதாண்டா போலீஸ், அருந்ததி படங்களை இயக்கியவர் தெலுங்கு சினிமா இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா மரணம்
துறைமுக இணைப்பு சாலை பணிக்காக பழைய மீன் ஏலக்கூடத்தை இடிக்க அதிகாரிகள் முடிவு
23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!
சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை
திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா
சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்