SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சுஸுகியின் 2 ஆப்ரோடு அசத்தல் பைக் அறிமுகம்

2018-10-07@ 00:11:28

சுஸுகி   நிறுவனம் சார்பில், RM-Z250 மற்றும் RM-Z450 ஆகிய இரண்டு ஆப்ரோடு பைக்குகளும் இந்திய மார்க்கெட்டில் களமிறக்கப்பட்டுள்ளன. இதில், சுஸுகி   RM-Z250 பைக்கில் சிங்கிள் சிலிண்டர் கொண்ட 249சிசி லிக்யூடு கூல்டு DOHC   இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மோட்டோக்ராஸ் பந்தயம் மற்றும் ஆப்ரோடு   சாகசங்களின்போது எளிதில் கையாளும் விதத்தில், இலகு எடை கொண்ட அலுமினிய சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பைக், 106 கிலோ எடை கொண்டது. சுஸுகி RM-Z450 பைக்கில் சிங்கிள் சிலிண்டர் அமைப்புடைய 449சிசி லிக்யூடு கூல்டு   DOHC இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கில் மூன்று விதமான டிரைவிங்   மோடு உள்ளது. இவை, சுஸுகியின் விசேஷமான Holeshot Assit Control சிஸ்டத்துடன் இணைந்து இயங்குகிறது. சுஸுகி RM-Z450 பைக்கில் BFRC என்ற   விசேஷ தொழில்நுட்பம் இருக்கிறது. இதன்மூலமாக, டர்ட் டிராக்குகளில்   ஓட்டும்போது மிகச்சிறந்த தரைப்பிடிப்பையும், அதிர்வுகளையும் வெகுவாக உள்வாங்கி குறைக்கும் நுட்பத்தையும் பெற்றிருக்கிறது.

புதிய சுஸுகி  RM-Z450 பைக்கின் முன்புறத்தில் 21 அங்குல சக்கரமும், பின்புறத்தில் 18 அங்குல  சக்கரமும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கில் முன்புறத்தில்  அப்சைடு  டவுன் போர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பைக்கில் இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளன. இந்த பைக் 112 கிலோ எடை கொண்டது. இந்த புதிய ஆப்ரோடு பைக்குகள் அறிமுகம் குறித்து சுஸுகி மோட்டார் சைக்கிள் இந்தியா   நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சதோஷி உச்சிடா கூறுகையில்,”கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் ஆப்ரோடு மற்றும் சாகச ரக பைக்குகளுக்கான வரவேற்பு   தொடர்ந்து அதிகரித்து வருவதை காண முடிகிறது. இந்த துறையில் இந்தியர்கள்   காட்டும் ஆர்வத்தையும், சந்தை தேவையை கருதியும், இந்த இரண்டு புதிய   மாடல்களை அறிமுகம் செய்துள்ளோம். இந்த புதிய மாடல்கள் வாடிக்கையாளர்களுக்கு   மிக திரில்லான அனுபவத்தை வழங்கும்,” என்றார். சுஸுகி RM-Z250  பைக் 7.10 லட்சம் விலையிலும், சுஸுகி RM-Z450 பைக் 8.31 லட்சம்  விலையிலும் (டெல்லி எக்ஸ்ஷோரூம்) வந்துள்ளன.  இரண்டு பைக்குகளையும் சாதாரண  சாலைகளில் ஓட்டுவதற்கு அனுமதி இல்லை. இந்த  பைக்குகள் இந்திய ஆப்ரோடு  மற்றும் சாகச பிரியர்களை வெகுவாக கவரும் என  நம்பலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்