SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டிவிஎஸ் ஜுபிடர் ஸ்கூட்டர் ஸ்பெஷல் எடிசன்

2018-10-07@ 00:10:59

பண்டிகை  காலத்தை முன்னிட்டு, டிவிஎஸ் ஜுபிடர் ஸ்கூட்டரின் ஸ்பெஷல் எடிசன் மாடல்  விரைவில் வெளிவர உள்ளது. இந்த ஸ்பெஷல் எடிசன் மாடல், டிவிஎஸ் ஜுபிடர்  கிராண்ட் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ஸ்பெஷல் எடிசன்  மாடலில் பல்வேறு பிரிமியம் அம்சங்கள் மற்றும் ஆக்சஸெரீகள் கொடுக்கப்பட்டு  இருக்கின்றன. முன்புற அப்ரானின் மேற்புறத்தில் கிராண்ட் எடிசன் பேட்ஜ்  பதிக்கப்பட்டு இருக்கிறது. புட்போர்டில் பீஜ் வண்ண பிளாஸ்டிக் பேனல்கள்  பயன்படுத்தப்பட்டுள்ளன. அதேபோன்று, லெதர் இருக்கையும் இந்த ஸ்கூட்டரின்  மதிப்பை உயர்த்துகிறது.

ஜுபிடர் கிளாசிக் மாடலில் இருப்பது  போலவே, இந்த ஸ்கூட்டடரில் மட்கார்டில் கிரோம் பீடிங் கொடுக்கப்பட்டு  இருக்கிறது. இது, நிச்சயம் இந்த ஸ்கூட்டரின் தனித்துவத்தை காட்டுவதோடு,  பார்க்க பிரிமியம் ஸ்கூட்டர் போலவே தோற்றமளிக்கிறது. இப்புதிய டிவிஎஸ்  ஜுபிடர் கிராண்ட் எடிசன் மாடலில் முழுவதுமான எல்இடி ஹெட்லைட்  இடம்பெற்றுள்ளது. அனலாக் மானி மற்றும் மின்னணு திரையுடன்கூடிய  இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்கூட்டரில் இருக்கும்  109.7 சிசி இன்ஜின் அதிகபட்சமாக 8 பிஎச்பி பவரையும், 8 என்எம் டார்க்  திறனையும் வழங்கும். சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. ‘’அராய்’’  சான்றுபடி, இந்த ஸ்கூட்டர் லிட்டருக்கு 56 கி.மீ மைலேஜ் தரும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான  தேர்வை வழங்கும் விதத்தில், இச்சிறப்பு பதிப்பு மாடலை டிவிஎஸ் விரைவில்  விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் விரைவில் அனைத்து  டீலர்களுக்கும் வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்பெஷல்  எடிசன் மாடல் நிச்சயம் டிவிஎஸ் ஜுபிடருக்கு அதிக வாடிக்கையாளர்களை  பெற்றுத்தரும் என்பதில் ஐயமில்லை. விலை விவரம் அறிவிக்கப்படவில்லை.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்