SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரஜினியின் பேட்ட 2வது லுக் வெளியீடு

2018-10-05@ 04:06:12

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினியின் பேட்ட பட 2வது லுக் நேற்று வெளியிடப்பட்டது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் பேட்ட. இந்த படத்தை சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரிக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். அனிருத் இசை அமைக்கிறார். ரஜினியுடன் விஜய் சேதுபதி முதல் முறையாக இணைந்து நடிக்கிறார். அதேபோல் திரிஷாவும் முதல் முறையாக ரஜினியுடன் நடிக்கிறார். பாலிவுட் நடிகர் நவாசுத்தீன் சித்திக் தமிழில் இப்படம் மூலம் அறிமுகம் ஆகிறார். சிம்ரன், பாபி சிம்ஹா, முனிஷ்காந்த் உள்பட பலர் நடிக்கின்றனர்.

எந்திரன் படத்துக்கு பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிப்பதால் இந்த படத்துக்கு ரசிகர்கள் இடையே பலத்த எதிர்பார்ப்பு உள்ளது. படத்தின் முதல் லுக் மற்றும் படத்தின் பெயர் கடந்த மாதம் வெளியாகி டிவிட்டரில் டிரெண்டிங் ஆனது. இந்நிலையில் பேட்ட படத்தின் இரண்டாவது லுக் நேற்று வெளியிடப்பட்டது. இதில் வெள்ளை வேட்டி சட்டை அணிந்து முறுக்கு மீசை என இளமையான தோற்றத்தில் கம்பீரமாக காட்சியளிக்கிறார். பேட்ட பட ரஜினியின் இந்த புதிய லுக் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

Tags:

Rajini

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-02-2019

    24-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-02-2019

    23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்