SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரம்மனின் தண்டம் கண்டுபிடித்த தெட்சணகாசி

2018-10-03@ 17:25:16

தேவர்கள் அசுரர்களிடம் இருந்து தப்பிக்க காசிக்கு நிகரான ஒரு தலத்தினை தேடினர். சிவபெருமான் பிரம்மாவிடம் உள்ள தண்டத்தை கங்கை நதியில் போட சொன்னார். அதன்பின் விஷ்ணு கருட வாகனத்தில் தொடர்ந்தார். தேவர்களும் பின் தொடர்ந்தனர். தண்டம் கடலில் போய் சங்கமித்தது. கடல் வழியாக தாமிரபரணி சங்கமிக்கும் இடமான புன்னக்காயல் வந்தது. ஆற்றில் நீரை எதிர்த்து முன்னேறியது. கருட வாகனத்தில் வீற்றிருக்கும் விஷ்ணு தேவர்கள் புடை சூழ வந்தார். திருப்புடை மருதூரில் தெற்கு பார்த்து திரும்பி கோவில் பின்புறம் நதியில் வலம் சுற்றி நின்றது. தேவர்கள் அனைவரும் ஒன்று கூடி மகிழ்ந்தனர்.

பிரம்ம தண்டத்தை கோவிலில் பிரதிஷ்டை செய்தார்கள். அசுரர்களின் தொந்தரவில் இருந்து விடுபட்டு மறைவிடம் வழங்கிய சிவபெருமானிடம், அசுரர்களை தோற்கடிக்கவும் வரங்களை பெற்றனர். இவ்விடத்தினை தெட்சணகாசி என்று பெயரிட்டு அங்கேயே பல காலம் தங்கி இருந்தனர். களக்காட்டை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்தவன் வீரமார்த்தாண்டன். இவர் மிகச் சிறந்த சிவ பக்தர். திருப்புடைமருதூரில் சிறப்பு வாய்ந்த ஓர் தலம் இருப்பதை அறியாத நிலையில் இருந்த மன்னன் ஒருநாள் வேட்டையாட வந்தான். சிவபக்தரான வீரமார்த்தாண்டனுக்கு அருள் வழங்க நினைத்த சிவபெருமான் மானாக அரசன் முன் தோன்றினார். மன்னர் மானின் மீது அம்பெய்தார். விலாவில் அம்பு பாய்ந்த நிலையில் மான் பிடிபடவில்லை.

மாறாக மருத மரத்தில் மறைந்தது. உடனே மன்னன் மரத்தின் அருகே ஓடினான். அங்கே மருத மரத்திலிருந்து ரத்தம் பொங்கி வடிந்தது. உடனே என்ன செய்வது என்று புரியாமல் மன்னன் தவித்தான். அப்போது, கீழ் திசையில் சுயம்பு லிங்கமாய் இருக்கும் கருணா மூர்த்தியை பார் என அசரீரி கேட்டது. வீரமார்த்தாண்டன் கீழ் திசையில் இருந்த சுயம்பு லிங்கத்தின் விலாவிலிருந்து ரத்தம் வருவதைக்கண்டு மன வேதனை கொண்டான். இறைவனே மான் வடிவில் வந்தது என்பதை உணர்ந்து வணங்கி, தன் தவறை பொறுத்தருள வேண்டினான். அதன் பின் பல சொத்துக்களை இககோயிலுக்கு எழுதி வைத்தான். மான் ரூபத்தில் இறைவன் காட்சி அளித்த காரணத்தால் மான் இனத்தையே கடவுளாக நினைத்தான்.

மான்கள் உலாவி திரிய பெருங்காடு  அமைத்து ‘திருமான் விளையாட்டம்’ என்று பெயர் வைத்தான். களக்காடு ராஜா வீரமார்த்தாண்ட மன்னன் கட்டளை தற்சமயம் திருப்புடைமருதூர் கோவிலில் களக்காடு ராஜா திருக்கட்டளை என்ற பெயரில் நடந்து வருகிறது. பக்தர் ஒருவருக்காக சிவ பெருமான் தாமிரபரணியை இரண்டாக பிரித்து வழிவிட்ட மற்றுமொரு வரலாறும் இக்கோயிலில் உள்ளது. கிருதயுக இறுதியில் திருகயிலாய பரம்பரையில் சிவபெருமானின் சிவகணங்களின் அதிபதியான தர்மகேது என்பவர் தோன்றினார். இவரது மகன் சோமபத்திரன். இவர் வன பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள வேடுவர் குல அரசனின் மகளைக் கண்டு மையல் கொண்டார். ஆனால் அவளுக்கோ இவர் மீது விருப்பம் இல்லை. சோமபத்ததிரனோ அவளை நெருங்கி தவறான முறையில் தனது ஆசையை வெளியிட்டார்.

இதனால் இறைவன் கோபமுற்றார், பின் சாபமிட்டார். அந்தசாபத்தின்படி பூமியில் பிறக்கவும், பின் இறைவனை நோக்கி தவமிருந்து அவர் அருளால் கம்ச பஞ்சாட்சர  மந்திரத்தால் பூர்வஞானம் பெற்றார். பூமியில் வாழ இறைவனின் அனுமதி பெற்றார். பூமியில் கடற்கரை ஓரமுள்ள இந்திரதடம் என்னும் மலையில் கீழ்புறம் உள்ள சகரநதி கரையில்  கெர்பேஸ்பரன் கோயில் கொண்டுள்ள கர்ப்பபுரத்தில் சிறந்த அறிஞனாக பிறந்தார். அவருக்கு கெர்பேஸ்வரன் என பெயரிட்டனர். சகல கலைத்திறமையும் பெற்று வாலிபன் ஆனார். அப்போது அவன் தாய் தந்தையர் அவருக்கு திருமணப் பேச்சை எடுத்தனர். கெர்பேஸ்வரனுக்கு தனது முற்பிறவி நினைவு வந்தது. எனவே தாய் தந்தையர்களிடம் கூறி தவம் இருக்க கிளம்பினார்.

சுமார் 12 வருட காலம் தவம் இருந்தார். அதன் பின்பு 1 ஆண்டு காலம் புண்ணிய ஸ்தலங்களை வழிபட ஆரம்பித்தார். தென்பகுதியில் வந்து பொதிகை மலையில் அகத்திய முனிவரின் அருளாசி பெற்று அவரின் ஆலோசனையின் பேரில் தாமிரபரணியில் உள்ள திருத்தலங்களை வழிபட கெர்பேஸ்வரன் கிளம்பினார். நாறும்பூ நாதரை வழிபட வந்த போது எதிர்க்கரையில் நின்ற கெர்பேஸ்வரன் ஆற்றில் கரை புரண்டு ஓடி வரும் ஆற்று வெள்ளத்தால் இப்பகுதி வர முடியாமல் தவித்தார். பின்பு இறைவனை நோக்கி ஓலமிட்டு ‘இறைவா..... அக்கரைக்கு நான் வர அருள் தா’ என்று கூறினார். அப்போது இறைவன் அருளால் நதி இரண்டாக பிரிந்து வழிவிட்டது.    

வழிவிட்ட பொருநை வழியாக கெர்பேஸ்வரன் இக்கரைக்கு வந்தார். அவரை பின் தொடர்ந்து தயிர்காரி ரூபத்தில் இருந்த சப்தகன்னிகள் 7 பேரும் வந்தனர். ஆனால் கெர்பேஸ்வரன் முன்னோக்கி வந்தார். எக்காரணத்தையும் கொண்டும் திரும்பி பார்க்காமல் சிவபெருமானிடம் வந்து சேர்ந்தார். சப்தநாக கன்னிகள் திடீரென்று திரும்பி பார்க்க நடு ஆற்றில் வழிவிட்ட ஆறு மூடிக்கொண்டது. இதனால்  வெள்ளத்தில் மாட்டிக்கொண்டனர். சப்தகன்னிகளை வெள்ளம் அடித்துச் சென்றது. ஆறு அடித்துச் செல்வதைக் கண்ட கெர்பேஸ்வரன் ‘பொருநை நதியே நில்’ என கட்டளையிட்டு நதியினை நிறுத்தி பெண்களை காப்பாற்றி கரையில் சேர்த்தார்.

கெர்பேஸ்வரனுடன் சப்த கன்னியர்கள் நாறும்பூநாதரை வணங்கி நின்றார். அவர்களில் ஒருவரை திருமணம் செய்து பல காலம் திருப்புடைமருதூரில் வாழ்ந்தார் கெர்பேஸ்வரன்.   அதன் பிறகே இறைவன் ஆணைப்படி சிவபெருமானின் பிரதம கணநாதராக சென்றார் என்று கூறப்படுகிறது. இதற்கு ஆதாரமாய் 7 நாககன்னிகள் சாஸ்தா கோவில் கல்லில் வடிக்கப்பட்டுள்ளது. திருப்புடைமருதூர் அருகே தாமிரபரணி கரையில் அமைந்துள்ள மற்றொரு சிறப்பு மிக்க தலம்.......

(நதி வற்றாமல் ஓடும்)


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-06-2019

  19-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • bji

  முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

 • suvami

  திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா

 • mango

  கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு

 • earth

  சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்