SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இலங்கை கடற்படையினர் தொடர்ந்து அட்டூழியம் : கோடியக்கரையில் தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு

2018-10-03@ 11:23:22

நாகை : வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் கடலில் மீன்பிடித்துக்  கொண்டிருந்த 11 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். சின்னமேட்டை சேர்ந்த 7 மீனவர்களின் வலைகளை அறுத்து இலங்கை கடற்படையினர் அவர்களை விரட்டியதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் வானகிரியை சேர்ந்த 4 மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் விரட்டியடித்ததாக புகார் கூறப்படுகிறது.

இலங்கை கடற்படையினர் தொடர்ந்து அட்டூழியம் நடத்தி வருகின்றனர். கடந்த 30-ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து  400-க்கும் மேற்பட்ட படகுகளில் சுமார் 1.600 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.கச்சத்தீவு - தனுஷ்கோடி இடையே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களின் வலையை அறுத்து எறிந்து அட்டூழியத்தில் ஈடுபட்டனர்

இதனால் தமிழக மீனவர்களுக்கும், இலங்கை கடற்படையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மீன்பிடித்தால் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்படுவோம் என்ற அச்சம் காரணமாக, மீன்பிடிப்பதை பாதியிலேயே நிறுத்திவிட்டு மீனவர்கள்  கரைக்கு திரும்பினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • aalangatty_kanamalai11

    டெல்லியில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக போக்குவரத்து முடக்கம்

  • northensnow

    பனிப்பொழிவால் உறைந்த வட மாநிலங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • baloon_worstand

    ஆந்திராவின் அரக்கு பகுதியில் சர்வதேச பலூன் திருவிழா : பிரமாண்ட வண்ண பலூன்களால் பார்வையாளர்கள் பரவசம்

  • redmoon_lunar12

    சிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலவு! : வானில் தோன்றிய முழு சந்திர கிரகணம்

  • 22-01-2019

    22-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்