SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சேலம் ஆத்தூர் அருகே பரபரப்பு ஆனைவாரி அருவியில் திடீர் வெள்ளம் குளித்துக்கொண்டிருந்த 30பேர் தவிப்பு: வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்

2018-10-03@ 03:43:22

ஆத்தூர்: ஆத்தூர் அருகே திடீர் வெள்ளப்பெருக்கால், ஆனைவாரி அருவியில் குளித்துக் கொண்டிருந்த 30 சுற்றுலா பயணிகள் பரிதவித்தனர். அவர்களை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி தாலுகாவில் வாரம் என்ற மலைகிராமத்தில் இருந்து உற்பத்தியாகும் தண்ணீர், சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா கல்லாநத்தம் அருகே முட்டல் ஏரியை வந்தடையும். கல்வராயன் மலைப்பகுதியில் உள்ள இந்த ஏரி அருகே ஆனைவாரி அருவி அமைந்துள்ளது. இதை வனத்துறையினர் ‘மினி குற்றாலம்’ என பெயரிட்டு சுற்றுலாத்தலமாக அறிவித்துள்ளனர். வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரிக்கும், அருவிக்கும் செல்ல ஒருவருக்கு 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. படகு சவாரி மேற்கொள்ள 30 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. நேற்று காந்தி ஜெயந்தி விடுமுறை நாள் என்பதால் 800க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். மாலை 3.30 மணியளவில், அருவியில் 30க்கும் மேற்பட்டோர் குளித்துக்கொண்டிருந்தபோது, திடீரென காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது.

இதனால் அருவியில் குளித்துக்கொண்டிருந்தவர்கள் திடீரென மூச்சுத்திணறலுக்கு ஆளாகினர். அவர்கள் தண்ணீரில் இருந்து வெளியே  வரமுடியாமல் தவித்தனர். விடுமுறை நாள் என்பதால் நேற்று 15 வனக்காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் உடனடியாக விரைந்து சென்று அருவியில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த திடீர் வெள்ளப்பெருக்கால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. வனத்துறையினர் விசாரித்ததில் திடீர் வெள்ளப்பெருக்கிற்கு முட்டல் ஏரியில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அருவிக்கு செல்லும் பாதையில் மண்சரிவு ஏற்பட்டதுதான் காரணம் என்பது தெரியவந்தது. மாலை 4 மணிக்கு பின்னர் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இன்றும் அந்த தடை நீடிக்கும் என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்